বাংলায় পড়ুন Read in English
This Article is From Nov 14, 2018

பாகிஸ்தானால் 4 மாநிலத்தைக் கூட ஒழுங்காக ஆள முடியாது - அஃப்ரிடி பரபரப்பு கருத்து

கடந்த ஏப்ரல் மாதத்தின்போது காஷ்மீர் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் அஃப்ரிடி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார்.

Advertisement
இந்தியா

பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆட்சி இருந்து வரும் நிலையில், அஃப்ரிடியின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

New Delhi:

ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர் அஃப்ரிடியின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. லண்டனில் பேசிய அவர், பாகிஸ்தான் அரசால் அந்நாட்டில் இருக்கும் 4 மாநிலங்களைக் கூட ஒழுங்காக ஆட்சி செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு சென்ற பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஃப்ரிடி அங்கு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அஃப்ரிடி பதில் அளித்துக் கொண்டிருந்தார். ஜம்மு காஷ்மீர் தொடர்பாக அஃப்ரிடி பேசியதாவது-

காஷ்மீரை பெறுவதில் பாகிஸ்தானுக்கு விருப்பம் இல்லை. அதே சமயத்தில் விட்டுக் கொடுப்பதற்கும் மனம் இல்லை. காஷ்மீர் சுதந்திரமாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் மனிதத் தன்மையாவது அங்கு உயிருடன் இருக்க வேண்டும். காஷ்மீர் மக்கள் உயிரிழக்க கூடாது. ஜம்மு காஷ்மீரை பாகிஸ்தான் விரும்பவில்லை. எங்கள் நாட்டு அரசால் இங்கு இருக்கும் 4 மாநிலங்களைக் கூட ஒழுங்காக ஆட்சி செய்ய முடியாது. காஷ்மீரில் மக்கள் உயிரிப்பதை பார்க்கும்போது எங்கள் மனம் வலிக்கிறது. எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் உயிரிழந்தாலும் அது வேதனைதான் என்று கூறியுள்ளார்.

Advertisement

அவர் பேசியிருக்கும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடந்த 2016-ல் காஷ்மீர் கிரிக்கெட் ரசிகர்கள் பாகிஸ்தான் வீரர்களுக்கு சப்போர்ட் செய்ய வேண்டும் என்று பேசியிருந்தார்.

Advertisement