இந்தியாவை பார்த்து பாகிஸ்தானும் சீனாவும் அஞ்சுகிறது.
Meerut (Uttar Pradesh): டெல்லி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசுபட்டு வருகிறது. இதற்கு பாகிஸ்தானும் சீனாவும் காரணம் என்று உத்திர பிரதேச பாஜக மூத்த தலைவர் வினித் அகர்வால் ஸ்ரதா புகார் கூறியுள்ளார்.
இது குறித்து மீரட்டின் பாஜக தலைவரான வினித் அகர்வால் கூறியதாவது;
“இந்தியாவை பார்த்து பாகிஸ்தானும் சீனாவும் அஞ்சுகிறது. பிரதமர் மோடியும் அமித் ஷாவும் ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் விரக்தி உருவாகியுள்ளது. அதனால் நம் நாட்டில் பாகிஸ்தான் நச்சு வாயுவை கசிய வைத்து டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளின் காற்றை மாசுபட வைக்கிறது. இது தெரியாமல் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த மாசுக்களுக்கு விவசாயிகள் எரிக்கும் வயல்வெளி காரணம் எனத் தவறாக எண்ணி வருகிறார். விவசாயி நம் நாட்டின் முதுகெலும்பாகும் அவர்களை குறை கூறக்கூடாது “ எனத் தெரிவித்துள்ளார்.
மகாபாரத கிருஷ்ணர் மற்றும் அர்ஜூனர் போல பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகிய இரு தலைவர்களும் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க வல்லவர்கள் என்றும் பாஜக தலைவர் கூறினார்.