அமைதிக்கான முயற்சிகள் தொடரும் என்கிறார் பாகிஸ்தான் அமைச்சர் மெஹ்மூத் குரேஷி
United Nations: தீவிரவாதிகளை உருவாக்கி வருகிறது என்ற குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்துள்ளது. மேலும், அற்பமான காரணங்களுக்காக இந்தியா பேச்சுவார்த்தையை ரத்து செய்திருப்பதாக விமர்சனம் செய்துள்ளது.
பாகிஸ்தான் வெளியறவு அமைச்சர் மெஹ்மூத் குரேஷி ஐ.நா. பொதுச்சபையில் நேற்று பேசியதாவது-
ஐ.நா. பொதுச்சபை கூட்டம் இங்கு நடந்து கொண்டிருக்கிறது. இதில் இந்தியாவும் பாகிஸ்தானும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆனால் அற்பமான காரணங்களுக்காக மோடி அரசு பேச்சுவார்த்தையை 3-வது முறையாக ரத்து செய்திருக்கிறது. அரசியல் காரணங்களுக்காக அமைதியை இந்தியா சீர்குலைக்கிறது.
பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் இந்தியாவுடன் நட்புறவுகொள்ள பாகிஸ்தான் விரும்புகிறது. இந்தியா உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் தொடர்ந்து மேற்கொள்ளும்.
அதே நேரத்தில் எல்லையில் அத்துமீறி இந்தியா தாக்குதல் நடத்தினால் அதற்கு சரியான பதிலடியையும் கொடுப்போம். சீனாவின் பெல்ட் ரோடு திட்டம் தொலை நோக்கு பார்வை கொண்ட முயற்சி. இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு முன்பாக பேசிய மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஊக்கப்படுத்துவதாகவும், பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டதற்கு பாகிஸ்தானே காரணம் என்று கூறியிருந்தார்.