சவுதி அரேபியாவில் நடக்கும் சர்வதேச தொழில் மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் (File)
New Delhi: தனது நாட்டு வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க பாகிஸ்தான் மீண்டும் அனுமதி மறுத்துள்ளது.
சவுதி அரேபியாவில் நடக்கும் சர்வதேச தொழில் மாநாட்டில் பங்கேற்கவும் அந்த நாட்டின் தலைவர்களை சந்திக்கவும், பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில் வெளியுறவு அமைச்சர், ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்தி பிரதமர் மோடியின் விமானம் சவுதி அரேபியா செல்ல அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால், அந்நாட்டு வான்வெளியை பயன்படுத்த அனுமதி மறுத்துள்ளது.
ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் ஐநா கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்க சென்ற பிரதமர் மோடியின் விமானத்துக்கு பாகிஸ்தான் அனுமதி மறுத்திருந்தது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விமானத்துக்கு அனுமதி மறுத்திருந்தது. இப்போது மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.