This Article is From Sep 24, 2018

“பேச்சுவார்த்தைக்கு இந்தியாதான் தயக்கம் காட்டுகிறது” - பாக். வெளியுறவு அமைச்சர் பேட்டி

இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு ரத்தானதை தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மெஹ்மூத் குரேஷி பேட்டியளித்துள்ளார்.

“பேச்சுவார்த்தைக்கு இந்தியாதான் தயக்கம் காட்டுகிறது” - பாக். வெளியுறவு அமைச்சர் பேட்டி

பேச்சுவார்த்தை ரத்து குறித்த இந்தியாவின் பதிலை தங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்கிறது பாகிஸ்தான்

Washington:

காஷ்மீரில் ராணுவ வீரர்கள் படுகொலை மற்றும் தீவிரவாதி புர்கான் வானிக்கு தபால் தலை வெளியிட்டது ஆகிய காரணங்களை சுட்டிக்காட்டி, அமெரிக்காவில் நடக்கவிருந்த இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மெஹ்மூத் குரேஷி, அந்நாட்டின் பிரபல தி டான் நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது-

பேச்சுவார்த்தைக்கு இந்தியாதான் தயக்கம் காட்டுகிறது; நாங்கள் எப்போதும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். காஷ்மீர் பிரச்னையை விட்டு விலகிச் சென்றால், பிரச்னை தீர்ந்து விடாது. எதற்காக பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்தது என்ற காரணம் எங்களுக்கு இன்னும்புரியவில்லை. ஒரு வெளியுறவு அமைச்சர் என்ற பொறுப்பை உணராமல் சுஷ்மா சுவராஜ் பேசியுள்ளார். நாங்கள் அமைதியைத்தான் விரும்புகிறோம். அதற்காக நாங்கள் பலவீனமானவர்கள் என்று அர்த்தம் கொள்ளக்கூடாது. எங்களால் போர் செய்ய முடியும்; ஆனால் அதற்கான மன நிலையில் நாங்கள் இன்று இல்லை. காஷ்மீருக்காக ஆயிரக்கணக்கானோர் போராடுகின்றனர். அவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

புர்கான் வானிக்கு தபால் தலை வெளியிட்டது குறித்து பதில் அளித்துள்ள குரேஷி, காஷ்மீருக்காக போராடுபவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் கிடையாது என்று கூறியுள்ளார்.

.