This Article is From Apr 07, 2019

மீண்டும் ஒரு தாக்குதல் நடத்த இந்தியா திட்டம்! - பகீர் கிளப்பும் பாகிஸ்தான்

இந்தியா மீதான இந்த குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரைஷி எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை.

மீண்டும் ஒரு தாக்குதல் நடத்த இந்தியா திட்டம்! - பகீர் கிளப்பும் பாகிஸ்தான்

வரும் 16 முதல் 20-ம் தேதிக்குள் இந்த தாக்குதல் நடைபெறலாம் என்று கூறியுள்ளார்

Karachi:

மீண்டும் ஒரு தாக்குதல் நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத்  குரைஷி பகீர் கிளப்பியுள்ளார்.

ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 41 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம்கள் மீது இந்திய விமானைப்படை வீரர்கள் கடந்த மாதம் 26ம் தேதி குண்டுகள் வீசி பயங்கரவாத பயிற்சி முகாமை தரைமட்டமாக்கினர்.

இதைத்தொடர்ந்து மறுநாளே, இந்திய பகுதியில் பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியது. அப்போது இந்திய போர் விமானங்கள் குறுக்கிட்டு அவற்றை தடுத்து நிறுத்தின. இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் எப்-16 ரக போர் விமானத்தை, இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் சுட்டு வீழ்த்தினர்.

இந்தநிலையில், இந்திய விமானப்படை வீரர் சென்ற மிக்-21 ரக போர் விமானம் பாகிஸ்தான் விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனால், விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து அபினந்தன் உயிர் தப்பினார். எனினும், பாகிஸ்தான் எல்லையில் அபினந்தன் தரையிரங்கியதால் அவரை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்து, 2 நாள் சிறை பிடித்து வைத்திருந்தது. பின்னர், சர்வதேச நாடுகளின் அழுத்தத்தை தொடர்ந்து அபினந்தன் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், இதேபோல் இன்னொரு தாக்குதலை நடத்த இந்தியா திட்டமிட்டு வருவதாகவும், எங்களுக்கு கிடைத்துள்ள  உளவுத்தகவல்களின்படி வரும் 16 முதல் 20-ம் தேதிக்குள் இந்த தாக்குதல் நடைபெறலாம் என்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா  மெஹ்மூத் குரைஷி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

இந்தியா மீதான இந்த குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரைஷி எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை, அவர் துல்லியமாக தேதியை எப்படி குறிப்பிடுகிறார் என்பது குறித்தும் எந்த விளக்கமும் தரவில்லை. ஆனால், பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு இந்த தகவலை தெரிவிக்க பிரமர் இம்ரான் கான் ஒப்புக்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

.