ஏர்பஸ் ஏ320 என்ற விமானம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக விபத்துக்குள்ளாகியது.
பாகிஸ்தானில் 99 பேருடன் சென்ற விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியது. லாகூரில் இருந்து கராச்சியை நோக்கி சென்ற விமானம், கராச்சி அருகே விழுந்து நொறுங்கியது. இந்த தகவலை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஏர்பஸ் ஏ320 என்ற விமானம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக விபத்துக்குள்ளாகியது.
விமானத்தில் 91 பயணிகள் உள்பட 99 பேர் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கராச்சி அருகே, குடியிருப்பு பகுதிக்கள் விழுந்து விமானம் விபத்தை சந்தித்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெளியாகியுள்ள காட்சிகளின்படி, விமானம் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் இருந்து கரும்புகை எழுந்து விண்ணை நோக்கி செல்லத்தொடங்கியுள்ளது.
சம்பவம் நடந்த பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படையினர் மீட்பு பணிகளை செய்து வருகின்றனர். விமானத்தில் இருந்தவர்கள் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.