This Article is From Jun 22, 2018

மத நல்லிணக்கத்தைப் போற்ற பாக்., அரசு எடுத்த நடவடிக்கை!

இந்திய சீக்கியர்கள் 300 பேருக்கு விசா வழங்கியுள்ளது பாகிஸ்தான். 

மத நல்லிணக்கத்தைப் போற்ற பாக்., அரசு எடுத்த நடவடிக்கை!

ஹைலைட்ஸ்

  • 1974-ம் ஆண்டு பாக்., - இந்தியா ஒரு ஒப்பந்தம் போட்டது
  • இதன்படி, மதநல்லிணக்கத்தைப் போற்ற இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன
  • இந்நிலையில், 300 சீக்கியர்களுக்கு பாக்., விசா வழங்கியுள்ளது
லாகூரைச் சேர்ந்த மகாராஜா ரஞ்சித் சிங்கின் நினைவு நாளுக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவைச் சேர்ந்த சீக்கிய மக்கள் பாகிஸ்தானுக்கு சென்று அஞ்சலி செலுத்துவர். லாகூரில் இருக்கும் தேரா சாகிப் குருத்வாராவில் இந்த ஆண்டு ஜூன் 21 முதல் 30 ஆம் தேதி வரை ராஜா ரஞ்சித் சிங்கின் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏதுவாக இந்திய சீக்கியர்கள் 300 பேருக்கு விசா வழங்கியுள்ளது பாகிஸ்தான். 

1974 ஆம் ஆண்டு, இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும், மத நல்லிக்கணத்தைப் போற்றும் வகையில் புனித ஸ்தலங்களுக்கு மக்கள் வருவதில் ஒத்துழைப்புக் கொடுக்க ஒப்பந்தம் செய்தன. இதை மதிக்கும் வகையில், பாகிஸ்தான் இந்த ஆண்டு 300 சீக்கிய மக்களுக்கு விசா அளித்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த சீக்கிய மக்கள் மட்டுமின்றி, உலகம் முழுக்க இருக்கும் சீக்கிய மக்களும் இந்த அஞ்சலி நிகழ்ச்சிக்கு வருவர். 

பாகிஸ்தான் அரசு மேலும், இந்த நிகழ்ச்சிக்காக சிறப்பு ரயில் ஒன்றையும் விடுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இதைப் போன்றதொரு சீக்கிய விழா பாகிஸ்தானில் கொண்டாடப்பட்டது. அப்போதும், இந்தியாவைச் சேர்ந்த 2000 சீக்கிய மக்களுக்கு விசா வழங்கியது பாகிஸ்தான். 
 

.