பாகிஸ்தான் ஆளுங்கட்சி பிரமுகர், ஒரு பத்திரிகையாளர் மீது இப்படி வன்முறையை ஏவிவிட்டது குறித்து பலத்த கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது
பாகிஸ்தானில் நடந்த நேரலை விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அந்நாட்டு ஆளுங்கட்சி பிரமுகர், விவாதத்தில் கலந்து கொண்ட பத்திரிகையாளருடன் கைகலப்பில் ஈடுபட்டுள்ளார்.
பாகிஸ்தானில் ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் மஸ்ரூர் அலி சியால் என்கின்ற நிர்வாகி, நேரலை விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அவரைப் போலவே இம்தியாஸ் கான் ஃபரான் என்கின்ற பத்திரிகையாளரும் விவாதத்தில் பங்கெடுத்தார்.
அப்போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சியால், பத்திரிகையாளர் கானை தாக்கத் தொடங்கியுள்ளார். முதலில் பத்திரிகையாளர் கானை, கீழே தள்ளிவிட்ட சியால், தொடர்ந்து அவரை அறைந்துள்ளார். அவர்கள் இருவரையும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிற விருந்தினர்களும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் பிரித்து வைத்தனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால், இருவருக்கும் இடையில் கைகலப்பு முடிந்தவுடன், இருவரும் தங்களது இருக்கையில் வந்து அமர்ந்தனர். தொடர்ந்து விவாத நிகழ்ச்சியும் நடந்தது.
அந்த வீடியோவை கீழே பார்க்கவும்:
பத்திரிகையாளர் கான், கராச்சி ப்ரஸ் க்ளப்பின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் ஆளுங்கட்சி பிரமுகர், ஒரு பத்திரிகையாளர் மீது இப்படி வன்முறையை ஏவிவிட்டது குறித்து பலத்த கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இது குறித்தான வீடியோ ஒன்றும் வைரலாக பரவி வருகிறது. பலரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
Click for more
trending news