This Article is From Apr 22, 2020

கொரோனா பரிசோதனை செய்து கொள்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்!! பொதுமக்கள் அதிர்ச்சி

பாகிஸ்தானில் மொத்தம் 9 ஆயிரத்து 749 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. 209 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரிசோதனை செய்து கொள்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்!! பொதுமக்கள் அதிர்ச்சி

தேசிய அளவில் 1,18,020 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • இம்ரான் கானை சந்தித்து பேசியவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது
  • இம்ரானும் கொரோனா பரிசோதனை செய்துகொள்வார் என அறிவிப்பு
  • பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்குகிறது.
Islamabad:

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்துப் பேசிய, அறக்கட்டளை நிர்வாகிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இம்ரான் கானும் கொரோனா பரிசோதனை செய்து கொள்வார் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. 

பாகிஸ்தானில் 'தி எத்தி' என்ற பிரபல அறக்கட்டளை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதனை அப்துல் சத்தார் என்பவர் ஏற்படுத்தினார். தற்போது பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதால் அதற்கு நிவாரணம் அளிப்பதற்காக இந்த அறக்கட்ட சார்பாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
 

இதற்காக ரூ. 1 கோடிக்கான காசோலையை அப்துல் சத்தாரின் மகன் பைசல் எத்தி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை நேரில் சந்தித்து கடந்த வாரம் வழங்கினார். இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக பைசலுக்கு கொரோனாவுக்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு அவருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் பைசலை சந்தித்து பேசிய இம்ரான் கானுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இம்ரான் கானுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுவதால் இந்த சம்பவம் அந்நாட்டு மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

பாகிஸ்தானில் மொத்தம் 9 ஆயிரத்து 749 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. 209 பேர் உயிரிழந்துள்ளனர். 

இங்கு பஞ்சாப் மாகாணத்தில் 4,328 பேருக்கும் சிந்துவில் 3,053 பேருக்கும் கைபர் பக்துங்வாவில் 1,345 பேருக்கும் கொரேனா பாதிப்பு உள்ளது. 

தேசிய அளவில் 1,18,020 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.