This Article is From Sep 30, 2018

பெரும் கடனில் தள்ளும் சீனாவின் பட்டுச்சாலை திட்டம் – கலங்கிப் போன பாகிஸ்தான்

சீனாவுடன் பட்டுச்சாலை திட்டத்தில் பாகிஸ்தான் இணையவுள்ளது. இதற்கான பட்ஜெட் மிக மிக அதிகம் என்பதால் அதற்கு தாக்குப்பிடிக்க முடியுமா என்ற கலக்கத்தில் இம்ரான் அரசு உள்ளது.

பெரும் கடனில் தள்ளும் சீனாவின் பட்டுச்சாலை திட்டம் – கலங்கிப் போன பாகிஸ்தான்

பட்டுச்சாலை திட்டத்தை ஆய்வு செய்துள்ளதே தவிர சீனா அதனை தொடங்கவில்லை

Islamabad:

சீனா – பாகிஸ்தான் இடையே பொருளாதார உறவை மேம்படுத்தும் வகையிலும், இரு நாடுகளின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கத்திலும் பட்டுச்சாலை எனப்படும் Belt and Road Initiative (BRI) என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான ஆய்வுகள் எல்லாம் செய்து முடிக்கப்பட்டுள்ளன.

செலவைப் பொறுத்தவரையில் சீனா தரப்புக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை. அதே நேரத்தில் பாகிஸ்தான் தரப்பில் ரூ. 56 ஆயிரம் கோடி அளவுக்கு செலவு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
 

u5tvpmj8

பாகிஸ்தானில் ஆட்சிமாற்றம் நடந்த பின்னர், புதிதாக பொறுப்பேற்றுள்ள இம்ரான் கான் அரசு செலவுகளை குறைத்து கஜானாவை நிரப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், இவ்வளவு பெரிய தொகையை செலவழித்து இந்த திட்டத்தை நிறைவேற்றித்தான் ஆக வேண்டுமா என்ற கலக்கத்தில் இம்ரான் கான் அரசு உள்ளது.

அப்படி செலவு செய்தாலும் அதில் பெரும் லாபம் சீனாவுக்கே கிடைக்கும் என பாகிஸ்தான் அரசின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பட்டுச்சாலை திட்டம் தொடங்கி நிறைவேற்றப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

oja8ug48

இதேபோன்று இலங்கை, மலேசியா மற்றும் மாலத்தீவுகளில் அமையவுள்ள புதிய அரசுகள் சீனாவின் பட்டுச்சாலை திட்டத்திற்கு சவாலாக இருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்டுச்சாலை திட்டத்தின்கீழ் சுமார் 1,872 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரயில் பாதைகள் அமைக்கப்படவுள்ளன. இதன் மூலம் தெற்காசிய நாடுகளுடன் பாகிஸ்தான் எளிதில் தொடர்பு கொள்ள முடியும். கூடுதல் செலகளை சரிக்கட்டுவதற்காக சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் இங்கு முதலீடு செய்ய வேண்டும் என பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.

அதேநேரத்தில் பட்டுச்சாலை திட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சீனா, பட்டுச்சாலை திட்டத்தில் லாபம் பார்க்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்றும் நட்பின் அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் கூறியுள்ளது.

சிக்கனப் பேர்வழியாக இருக்கும இம்ரான் கான் அரசால் பட்டுச்சாலை திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்படுமா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

.