லாகூர் முதல் வாகா வரை செல்லும் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
New Delhi:
பாகிஸ்தானில் இருந்து இந்தியா நோக்கி வந்துகொண்டிருந்த சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் வாகா எல்லையில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
பாகிஸ்தானின் லாகூரில் இருந்து இந்தியா நோக்கி வந்துகொண்டிருந்த சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் பிற்பகல் 1 மணி அளவில் பாதியில் நிறுத்தப்பட்டதால் அதில் பயணம் செய்து வந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் அதிரடி முடிவை தொடர்ந்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
எனினும், கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக, வாகா எல்லைக்கு அருகே ரயில்வே தண்டவாளத்தில், 4 கிலோ ஹெராயின் மற்றும் 2 செல்போன், சிம்கார்டுகளை அமிரிஸ்டர் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுகுறித்து புலனாய்வு அமைப்புகள் கூறும்போது, சம்ஜவ்தா எக்ஸ்பிரஸில் உள்ள பாகிஸ்தான் குழுவினர் இந்த போதை பொருள் கடத்தலில் ஈடுப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இதனால், பஞ்சாப் போலீசார் தங்களை கைது செய்வார்கள் என்று அச்சமடைந்த சம்ஜவ்தா எக்ஸ்பிரஸை இயக்கி வந்த பாகிஸ்தான் குழுவினர், ரயிலை இந்தியாவிற்குள் இயக்க மறுப்பு தெரிவித்துள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன.
இதைத்தொடர்ந்து, ஏறக்குறைய மூன்று மணி நேரத்திற்குப் பிறகு, ஒரு இந்தியக் குழு சம்பவ இடத்திற்கு சென்று ரயிலை இயக்க பொறுப்பேற்றுது. அதன் பின்னரே, ரயில் தற்போது அட்டாரி பகுதிக்குச் சென்று கொண்டிருக்கிறது.