அமைதி ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
Jammu: ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுடன் செய்து கொண்ட அமைதி உடன்படிக்கைக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் தொடர் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக எல்லையோர கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரின் ரஜவ்ரி மாவட்டத்தில் இன்று காலை பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர். இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
நவ்ஷெரா செக்டரின் கேரி, லாம், புகார்னி மற்றும் பீர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து தகவல் ஏதும் வெளிவரவில்லை.