ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் தாக்குதலை நடத்தியுள்ளது பாகிஸ்தான்.
Jammu: ஜம்மு காஷ்மீர் எல்லையில் கிராமங்களை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு இந்திய பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.
காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் அத்துமீறியுள்ளது. கத்துவா பகுதியிலும் ஒரு சில கிராமங்கள் பாகிஸ்தானால் தாக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த அபிஷேக் ராய் என்ற வீரர் காயம் அடைந்தார். நேற்றிரவு கத்துவா மாவட்டத்தின் ஹிராநகர் செக்டாரில் உள்ள மன்யாரி கிராமத்தை பாகிஸ்தான் தாக்கியபோது இந்த சம்பவம் நேர்ந்தது.
மீண்டும் இன்று அதிகாலை 3.25-க்கு பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.
அதன்பின்னர் கிர்னி மற்றும் ஷாபூர் செக்டார் பகுதியில் உள்ள கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் காலை 7.45-க்கு தாக்குதல் நடத்தியது.
நடப்பாண்டில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் அதிகமான முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி எல்லையில் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதில் அப்பாவி பொதுமக்கள் 21 பேர் உயிரிழந்தனர்.