This Article is From Oct 31, 2019

குல்பூஷன் விவகாரத்தில் வியன்னா ஒப்பந்தத்தை மீறியது பாகிஸ்தான் - சர்வதேச நீதிமன்றம் புகார்

ஈரானில் வர்த்தகம் செய்து கொண்டிருந்த குல்பூஷன் ஜாதவை பாகிஸ்தான் கடத்தியதாகவும், அவர்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்து மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாகவும் இந்தியா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

குல்பூஷன் விவகாரத்தில் வியன்னா ஒப்பந்தத்தை மீறியது பாகிஸ்தான் - சர்வதேச நீதிமன்றம் புகார்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.

United Nations:

குல்பூஷன் ஜாதவ் விவகாரத்தில் வியன்னா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியுள்ளதாக சர்வதேச நீதிமன்றம் ஐநா சபையில் குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி அப்துல்காவி யூசுப் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

அந்த அறிக்கையில், கடந்த ஜூலை 17-ம்தேதி வியன்னா ஒப்பந்தத்தின் பகுதி 36-யை பாகிஸ்தான் மீறியுள்ளதாகவும், இதனை நிவர்த்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கையையும் பாகிஸ்தான் எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குல்பூஷன் ஜாதவ் தொடர்பான வழக்கை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், ஜாதவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. முன்னதாக பாகிஸ்தானை உளவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு கடந்த 2017 ஏப்ரலில் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. 

ஈரானில் வர்த்தகம் செய்து கொண்டிருந்த குல்பூஷன் ஜாதவை பாகிஸ்தான் கடத்தியதாகவும், அவர்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்து மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாகவும் இந்தியா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இந்த விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு மத்திய அரசு கொண்டு சென்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் குல்பூஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டுள்ளது. 

.