Read in English
This Article is From Oct 14, 2018

“இந்தியா மீது 10 சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்துவோம்” - மிரட்டும் பாகிஸ்தான்

இனிமேல் பாகிஸ்தான் மீது இந்தியா ஒரு சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தினால், நாங்கள் 10 சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்துவோம் என்று பாகிஸ்தான் மிரட்டியுள்ளது

Advertisement
இந்தியா

பாகிஸ்தான் ராணுவ வலிமையை தவறாக மதிப்பிட வேண்டாம் என அந்நாட்டின் ராணுவ செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்

Islamabad:

பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்த இந்திய ராணுவம் கடந்த 2016 செப்டம்பரில் அதிரடி தாக்குதலை நடத்தியது. இதில் ஏராளமான தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் பதுங்கியிருந்த முகாம்களும் அழிக்கப்பட்டன. நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த நடவடிக்கை துல்லியத் தாக்குதல் என பொருள்படும் “சர்ஜிகல் ஸ்ட்ரைக்” என்ற ஆங்கில வார்த்தையால் அழைக்கப்படுகிறது.

இந்த நிலையில் மீண்டும் ஒருமுறை இந்தியா சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தினால் நாங்கள் 10 சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்துவோம் என்று பாகிஸ்தான் மிரட்டியுள்ளது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பாகிஸ்தானின் ராணுவ தளபதி கமர் ஜாவித் பாஜ்வா, செய்தி தொடர்பாளர் ஆசிப் கபூர் உள்ளிட்டோர் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர். லண்டனின் பிரபல வானொலி ஒன்றுக்கு ஆசிப் கபூர் பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது-

Advertisement

“பாகிஸ்தானின் வலிமையை எவரும் தவறாக மதிப்பிட வேண்டாம். இனிமேல் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்தியா தாக்குதல் நடத்தினால் நாங்கள் 10 முறை அந்நாட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவோம். 3.7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீனாவுடன் பொருளாதார நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொண்டு வருகிறது. இதனை பாதுகாக்கும் பொறுப்பு பாகிஸ்தான் ராணுவத்திடம் உள்ளது. இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு விட்டால் பொருளாதார சக்தி மிக்க நாடாக பாகிஸ்தான் மாறும். எங்கள் நாட்டில் ஊடக சுதந்திரம் முழுமையாக கடைபிடிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement