This Article is From Feb 19, 2019

‘இந்தியா தாக்கினால் பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும்!’- இம்ரான் கான் எச்சரிக்கை

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்

‘இந்தியா தாக்கினால் பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும்!’- இம்ரான் கான் எச்சரிக்கை

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது

புல்வாமா தாக்குதல் நடந்ததை அடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் நாட்டு பிரதமர் இம்ரான் கான், ‘இந்தியா எங்களைத் தாக்கினால், அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்' என்று எச்சரித்துள்ளார். 

கடந்த வியாழக் கிழமை, ஜம்மூ-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் 78 வாகனங்களில் சி.ஆர்.பி.எப் பாதுகாப்புப் படை வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது 22 வயது நிரம்பிய தீவிரவாதி ஒருவர், 60 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து கொண்ட கார் மூலம் வந்து, பாதுகாப்புப் படையினர் வந்த வாகனத்தில் மோதினார். இதனால், 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்குக் காரணம் பாகிஸ்தானை மையமாக வைத்து செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புதான் என்று சொல்லப்படுகிறது. இதனால் இந்திய அரசு, பாகிஸ்தான் மீது மிகவும் கோபத்தில் உள்ளது. இந்திய தரப்பு, பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சர்வதேச நாடுகளை வலியுறுத்தி வருகிறது.

இப்படிப்பட்ட பதற்றம் நிறைந்த சூழலில் இன்று பேசிய இம்ரான் கான், ‘புல்வாமா தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இதை காரணமாக வைத்து பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். 

இப்போது பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று இந்திய தரப்பு சொல்லி வருவதெல்லாம் தேர்தலை மனதில் வைத்துத்தான். அதே நேரத்தில், அது உண்மையாக இருக்கும் பட்சத்தில், பாகிஸ்தான் திருப்பியடிக்க யோசிக்காது. கண்டிப்பாக அடிக்கும்' என்று எச்சரிக்கும் தொனியில் பேசியுள்ளார். 

புல்வாமா தாக்குதல் குறித்து கடந்த சில நாட்களாக மவுனம் காத்து வந்த இம்ரான் கான், இப்போதுதான் அது குறித்து அதிகாரபூர்வமாக கருத்து தெரிவித்துள்ளார். 

 

மேலும் படிக்க : 100 மணி நேரத்தில் ராணுவம் காட்டிய அதிரடி; புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி!

.