பாகிஸ்தான் அரசு ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு பண உதவி அளிப்பதை தடுக்கும் என்ற விஷயத்தை முழுமையாக முன்னெடுக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கான தீவிர நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்று அரசு கூறியுள்ளது.
பாகிஸ்தான் தகவல்தொடர்பு அமைச்சர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் ''அனைத்து தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராகவும் அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும், இதனை எந்தவித பாகுபாடுமின்றி பாகிஸ்தான் நடத்தும்" என்றும் கூறியுள்ளார்.
ஆனாலும் இதற்கான காலக்கெடு என்ன என்பதை தெரிவிக்க மறுத்து விட்டார். காலகெடுவை பாதுகாப்பு படைதான் முடிவுசெய்ய வேண்டும் என்றார். அரசு 10 அம்சக் கோரிக்கைகளுடன் 27 இலக்குகளை நிர்ணயித்துள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு கண்டணம் தெரிவித்து பாரிஸை சேர்ந்த சர்வதேச அமைப்பான எஃப்ஏடிஎஃப் பாகிஸ்தான் அரசு தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி அளிக்கிறது என்றது. அதற்கு பதிலளிக்கும் விதத்தில் இந்த செய்தியை அரசு தற்போது வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 30 ஆண்டுகளில் மோசமான தாக்குதலாக புல்வாமா தாக்குதல் பதிவாகியுள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு நிதி உதவி செய்கிறது என்பதை இந்தியா மிகப்பெரிய புகாராக சர்வதேச அரங்கில் முன்வைத்துள்ளது.
மேலும் படிக்க - "எத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்..?"