This Article is From Jun 17, 2019

பாகிஸ்தான் ராணுவத்தை விமர்சித்த பத்திரிகையாளர் கொலை

ராணுவத்தையும் உளவத்துறையையும் விமர்சனம் செய்த காரணத்தால் கொல்லப்பாட்டார் என்ற இணையவாசிகள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்

பாகிஸ்தான் ராணுவத்தை விமர்சித்த பத்திரிகையாளர் கொலை

அவரது யூ ட்யூப் சேனலில் 22,000 பேரும் ஃபேஸ்புக்கில் 22,000 பேரும் பின் தொடர்பாளர்கள் உள்ளனர்.

Islamabad:

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 22 வயதான பத்திரிகையாளர் முகம்மது பிலால் கான்,  நாட்டின் ராணுவத்தையும் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ குறித்து விமர்சித்தவர் கொல்லப்பட்டார். 

பத்திரிகையாளர் முகம்மது பிலால் கான் ட்விட்டரில் 16,000 பின் தொடர்பாளர்களை கொண்டுள்ளார். அவரது யூ ட்யூப் சேனலில் 22,000 பேரும் ஃபேஸ்புக்கில் 22,000 பேரும் பின் தொடர்பாளர்கள் உள்ளனர். 

 ஞாயிற்றுக் கிழமை இரவு நண்பன் பரா கஹுகு போன் செய்து அழைக்கவும் ஜி-9 என்ற இடத்திற்கு சென்றுள்ளார். அந்த நண்பர் அவரை காட்டுக்குள் அழைத்துச் சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

பத்திரிகையாளரைக். கொல்ல இருபக்கமும் கூர்மையாக உள்ள கத்தியை பயன்படுத்தியுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் சடேர் மாலிக் நயீம் கூறியுள்ளார். பத்திரிகையாளரின் நண்பரும் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளார். சமூக ஊடக ஆர்வலர் என்பதைத் தவிரல் திரு.கான் ஒரு ஃபிரீலான்ஸ் பத்திரிகையாளராகவும் இருந்தார். அவர் கொல்லப்பட்ட தகவல் வெளியானதும் #Justice4MuhammadBilalKhan  என்ற ஹேஷ் டேக் பிரபலமடையத் தொடங்கியது. 

ராணுவத்தையும் உளவத்துறையையும் விமர்சனம் செய்த காரணத்தால் கொல்லப்பாட்டார் என்ற இணையவாசிகள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்

.