This Article is From Jun 20, 2020

பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் வழங்க முயற்சித்த பாக்., ட்ரோன் சுட்டு வீழ்த்தல்!

ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களை வழங்குவதற்காக பாகிஸ்தான் படைகள் மேற்கொண்ட மற்றொரு முயற்சி என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் வழங்க முயற்சித்த பாக்., ட்ரோன் சுட்டு வீழ்த்தல்!

பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் வழங்க முயற்சித்த பாக்., ட்ரோன் சுட்டு வீழ்த்தல்!

Srinagar:

ஜம்மு-காஷ்மீரில் கத்துவா அருகே ஆயுதங்களை ஏந்திய ட்ரோன் எல்லை பாதுகாப்பு படையினரால் இன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், அதிலிருந்து அமெரிக்காவை சார்ந்த M4 ரக துப்பாக்கியும், இரண்டு இதழ்களும், வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன. 

இது, ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களை வழங்குவதற்காக பாகிஸ்தான் படைகள் மேற்கொண்ட மற்றொரு முயற்சி என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 

பயங்கரவாதி அலி பாய்க்கு டெலிவரி செய்வதற்கு இந்த ட்ரோன் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. அதில், இருந்த பேலோடில் அவரது பெயர் இருந்ததாக மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

8mfhokm8

பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் வழங்க பாகிஸ்தான் முயற்சி 

"8 அடி அகலம் கொண்ட இந்த ட்ரோன் கத்துவா பகுதியில் உள்ள எல்லை பாதுகாப்பு படைக்கு அருகே பாகிஸ்தானின் பனேசர் பகுதியில் இருந்து கட்டுப்படுத்தப்படுவதாக தெரிகிறது" என்று அந்த அதிகாரி கூறினார்.

இன்று அதிகாலை 5.10 மணியளவில் எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, ட்ரோன் வானத்தில் சுற்றிக் கொண்டிருந்தது அவர்கள் கண்ணில் பட்டுள்ளது. இந்திய எல்லைக்குள் 250 மீட்டர் தூரம் பறந்து கொண்டிருந்த அந்த ட்ரோன் மீது பாதுகாப்பு படை வீரர்கள் ஒன்பது சுற்றுகள் துப்பாக்கிச்சூடு நடத்தி வீழ்த்தினர். 

சில மாதங்களுக்கு முன்பு ஜம்மு பகுதிக்கு அருகே கொல்லப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளிடமிருந்து இதே தயாரிப்பிலான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

பாகிஸ்தான் ஏஜென்சிகளின் இந்த வெட்கமற்ற செயல்கள் காஷ்மீரில் தீவிரமாக செயல்படும் ஜெய்ஷ்-இ- பயங்கரவாதிகளை பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கும், அமைதி மற்றும் ஒழுங்கை சீர்குலைப்பதற்கும் ஆயுதம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன" என்று அந்த போலீஸ் அதிகாரி கூறினார்.

"பாகிஸ்தானின் எல்லையிலுள்ள மற்ற பகுதிகளிலும், குறிப்பாக குப்வாரா, ராஜோரி மற்றும் ஜம்மு பகுதிகளிலும் இதேபோன்று ஆயுதங்களை கடத்தும் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன" என்று அவர் கூறினார்.
 

.