இதை சமூக ஊடகங்களிலும் பலர் பகிர்ந்துள்ளனர்.
பாகிஸ்தானில் கழுத்து அளவு ஆழமுள்ள தண்ணீரில் நின்று வெள்ளத்தின் நிலை குறித்து ரிப்போர்டிங் செய்த பத்திரிகையாளரின் வீடியோ ஆன்லைனில் வைரலாகியுள்ளது. செய்தி சேனலான ஜி டிவியில் பணி புரியும் ஆசார் உசேன் மத்திய பாகிஸ்தானின் கோட் சாட்ட பகுதியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறித்து கழுத்தளவு தண்ணீரில் நின்று தன் அறிக்கைய் அளித்தார்.
யூரோ செய்திப்படி, ஆறு நாட்கள் மழை பெய்த பின்னர் உள்ளூர் மக்கள் அனுபவித்த சிரமங்களை விளக்கவே பத்திரிகையாளர் அவ்வாறு செய்ததாக தெரிவிக்கிறது. இந்த வீடியோ ஜூலை 25அன்று ஜி டிவியின் யூ ட்யூப் சேனலில் பகிரப்பட்டது. இது 1.4 லட்சம் தடவை பார்க்கப்பட்டுள்ளது. இதை சமூக ஊடகங்களிலும் பலர் பகிர்ந்துள்ளனர்.
உசேன் கழுத்து அளவு ஆழமான தன்ணீரில் நிற்கிறார். அவரின் தலை மற்றும் மைக் மட்டுமே தெரிகிறது. தன்னுடைய ரிப்போர்ட்டிங்கில் வெள்ளத்தினால் விவசாய நிலம் மூழ்கியது குறித்து விவரிக்கிறார்.
சமூக ஊடகங்களில் பலர் உசேனின் பணியை பாராட்டியுள்ளனர். சிலர் செய்தி சேனல்கள் தங்கள் நிருபரை ஆபத்தான சூழலில் நிற்க வைத்துள்ளதாக விமர்சனம்செய்துள்ளனர்.
Click for more
trending news