This Article is From Jan 18, 2020

Viral Video: அரசராக வேடமிட்டு செய்தி வழங்கிய பாகிஸ்தான் ஊடகவியலாளர்

வீடியோவில் “எங்க அரச சமயலறையில் திருமணத்தை நடத்தியவர் தண்டிக்கப்படுவார்” என்று நிருபர் அமின் ஹபீஸ் பேசியது ஆன்லைனில் வைரலாகியுள்ளது.

Viral Video: அரசராக வேடமிட்டு செய்தி வழங்கிய பாகிஸ்தான் ஊடகவியலாளர்

இந்த கோட்டை யுனெஸ்கோவால் அழியும் நிலையில் உள்ள நினைவுச்சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள செய்தி தொகுப்பாளர் அரசராக மாறி ஆயிரக்கணக்கானோரை மகிழ்வித்துள்ளார். அரசர் போன்ற உடையும் நகைகள், தலைப்பாகை, வாள் மற்றும் பின்னணியில் இரண்டு உதவியாளார்கள் என செய்தி அறிக்கைகாக நின்று தனது செய்தியினை வழங்குகிறார்.

லாகூரில் விலங்கு வர்த்தகம் குறித்து புகார் அளித்தபோது கழுதை மீது அமர்ந்ததற்காக அமின் ஹபீஸ் முன்பு வைரலாகியுள்ளார். இந்த முறை லாகூர் கோட்டையின் அரச சமையலறையில் வியாழக்கிழமை நடந்த ஒரு திருமணத்தை பற்றி தன் செய்தியை வழங்க இந்த கெட்-அப்பை தேர்ந்தெடுத்துள்ளார். 

ஜியோ டிவியின்படி இந்த கோட்டை யுனெஸ்கோவால் அழியும் நிலையில் உள்ள  நினைவுச்சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த கோட்டை அபாயத்தில் உள்ள பாரம்பரிய தளமாக பட்டியலிடப்பட்டுள்ளது. அரசாங்க விதிமுறைகளை அங்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

வீடியோவில் “எங்க அரச சமயலறையில் திருமணத்தை நடத்தியவர் தண்டிக்கப்படுவார்” என்று நிருபர் அமின் ஹபீஸ் பேசியது ஆன்லைனில் வைரலாகியுள்ளது.

அவரது வீடியோவை மற்றொரு பாகிஸ்தான் பத்திரிகையாளர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். கீழே உள்ள வீடியோவை காணுங்கள்:
 

ஆன்லைனில் பகிரப்பட்டதிலிருந்து வீடியோ கிட்டத்தட்ட 2.5 லட்சம் முறை பார்க்கப்பட்டது. 3,000க்கும் மேற்பட்ட ‘லைக்குகளை' பெற்றுள்ளது. வீடியோவின் பிற பதிப்புகள் ட்விட்டருக்கும் வந்துள்ளன. ஒவ்வொரு பதிப்பும் 10,000க்கும் மேற்பட்ட பார்வைகளை சேகரித்தது.

வீடியோவுக்கு சமூக ஊடக பயனர்கள் எவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர் என்பதை இங்கு காணலாம்.

நிருபர் 2018ஆம் ஆண்டில் தனது சொந்த திருமணத்தை  விழா மேடையில் வைத்து தனது மனைவி மற்றும் குடும்பத்தினரை பேட்டி கண்டது மிகவும் வைரலானது.

Click for more trending news


.