ஏழு வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற இம்ரான் அலி
Lahore: ஏழு வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற காரணத்தால் தொடர் கொலையாளி இம்ரான் அலிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சிறுமியின் பெற்றோர் அளித்த பொது மரண தண்டனை கோரிக்கை மறுக்கப்பட்டதால் சிறையிலேயே புதன்கிழமையன்று மரண தண்டனை நிறைவேற்றபட்டது.
நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்திய இந்த கொடூர சம்பவம் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் நடந்து இரண்டு வாரங்களில் கைதான இம்ரான் அலி (23) இது போன்று பல்வேறு பலாத்கார வழக்குகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுமியின் பெற்றோர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்ட இம்ரான் அலியைக் பொது இடத்தில் வைத்து மரணதண்டனையை நிறைவேற்ற வேண்டும் என நீதிபதிகளிடம் கேட்டுக்கொண்டனர். இதை நீதிபதிகள் மறுத்த நிலையில் சிறைக்கு உள்ளே நிறைவேற்றபட உள்ள மரண தண்டனையை நேரலை ஒளிபரப்பு செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதனை ஏற்காத நீதிபதிகள் மரணதண்டனையை சிறைக்குள்ளேயே நிறைவேற்றினர்.
இதற்கு பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய சிறுமியின் பெற்றோர் தண்டனையை நேரலையாக ஒளிபரப்பாதது வருத்தமளிக்கிறது எனவும் ஆனால் கொலையாளிக்கு உரிய தண்டனை கிடைத்துள்ளது என கூறினார்.