This Article is From Feb 28, 2019

ஜம்மூ காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டை மீறும் பாகிஸ்தான்… பள்ளிகள் மூடல்!

கடந்த ஆண்டு மட்டும் பாகிஸ்தான் தரப்பு, 3000 முறை எல்லைக் கட்டுப்பாட்டை மீறியுள்ளது

ஜம்மூ காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டை மீறும் பாகிஸ்தான்… பள்ளிகள் மூடல்!

பாகிஸ்தார் தரப்பு, மெந்தார், ராஜவுரி, நவ்ஷேரா பகுதிகளில் எல்லைக் கட்டுப்பாட்டை மீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

New Delhi:

இன்று காலை ஜம்மூ காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான், கட்டுப்பாட்டை மீறி தாக்கி வருவதால், எல்லைக்கு அருகில் இருக்கும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து 7வது நாளாக பாகிஸ்தான் தரப்பு, எல்லைக் கட்டுப்பாட்டை மீறி தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

பாகிஸ்தார் தரப்பு, மெந்தார், ராஜவுரி, நவ்ஷேரா பகுதிகளில் எல்லைக் கட்டுப்பாட்டை மீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மெந்தார் பகுதியில் அதிக அளவிலான ஆயுதங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இது குறித்து இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர், ‘பாகிஸ்தான் ராணுவம் எங்கெல்லாம் எல்லைக் கட்டுப்பாட்டை மீறி தாக்குதல் நடத்தியதோ, அப்போதெல்லாம் இந்திய ராணுவம் அதற்கு பதிலடி கொடுத்தது' என்றுள்ளார். 

கடந்த ஆண்டு மட்டும் பாகிஸ்தான் தரப்பு, 3000 முறை எல்லைக் கட்டுப்பாட்டை மீறியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் இதுவே அதிக எண்ணிக்கையாகும். 

‘2003 ஆம் ஆண்டு இரு நாடுகளும் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தை அடுத்தும் பாகிஸ்தான் தரப்பு தொடர்ந்து எல்லைக் கட்டுப்பாட்டை மீறி வருவது குறிப்பிடத்தக்கது. இப்படி பாகிஸ்தான், எல்லைக் கட்டுப்பாட்டை மீறி வருவதால் இந்திய எல்லைக்கு அருகில் வசித்து வரும் மக்கள் தொடர்ந்து அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்' என்று இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்

 

மேலும் படிக்க -  ‘மேலும் ராணுவ நடவடிக்கை பிரச்னையை பெரிதாக்கும்!'- அமெரிக்கா கருத்து

.