Read in English
This Article is From May 31, 2019

உளவு பார்த்த குற்றச்சாட்டு: பாகிஸ்தான் ராணுவத் தளபதிக்கு ஆயுள் தண்டனை!

பாகிஸ்தான் ராணுவத்துக்கு என்று பிரத்யேகமாக சட்டங்களும் நீதிமன்றங்களும் இருக்கின்றன

Advertisement
உலகம் Edited by

குற்றம் சாட்டப்படும் ராணுவத்தினர் மீது ரகசிய முறையில் விசாரிக்கப்படும். ராணுவ நடைமுறைகளின்படியே, அங்கு கொடுக்கப்படும் தீர்ப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். 

ISLAMABAD :

பாகிஸ்தானைச் சேர்ந்த ராணுவத் தளபதி உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளளது அந்நாட்டு நீதிமன்றம். இதே வழக்கில் சிக்கிய மேலும் இரு கீழ்மட்ட அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

உளவு பார்த்தது குறித்தான வழக்கு ராணுவ நீதிமன்றத்தில் ரகசியமான முறையில் நடந்தது. இதையடுத்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ராணுவத் தளபதி காமர் ஜாவத் பாஜ்வா மீது, “தேசிய பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் பல முக்கிய விஷயங்களை கசியவிட்டார்” எனக் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஓய்வு பெற்ற லெஃப்டனென்ட் ஜெனரல் ஜாவத் இக்பாலுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் சட்டப்படி அவர் 14 ஆண்டுகள் சிறையில் கழிப்பார். மேலும் ஓய்வுபெற்ற பிரிகேடியர் ராஜா ரிஸ்வான் மற்றும் ராணுவத்தால் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த மருத்துவரான வாசிம் அக்ரம் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் ராணுவம், மேலும் எந்த வித தகவலையும் அளிக்கவில்லை. குற்றம் சாட்டப்பட்டுள்ள மூவரும் யாருக்குத் தகவல்களை லீக் செய்தனர் என்பது குறித்து விவரமும் கூறப்படவில்லை. 

பாகிஸ்தான் ராணுவத்துக்கு என்று பிரத்யேகமாக சட்டங்களும் நீதிமன்றங்களும் இருக்கின்றன. குற்றம் சாட்டப்படும் ராணுவத்தினர் மீது ரகசிய முறையில் விசாரிக்கப்படும். ராணுவ நடைமுறைகளின்படியே, அங்கு கொடுக்கப்படும் தீர்ப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். 

Advertisement
Advertisement