2012ம் ஆண்டு ஆன்லைனில் பழக்கப்பட்ட பெண்ணை சந்திப்பதற்காக ஆப்கானிஸ்தான் மூலம் பாகிஸ்தானுக்குள் நுழைந்துள்ளார்
Peshawar: பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் "சிறையிலிருக்கும் இந்தியர் ஹமித் நிஹல் அன்சாரியை விடுவிக்கு இன்னும் ஒருமாதம் காலம் ஆகும்" என்று கூறியுள்ளது. அவரது தண்டனைக்காலம் டிசம்பர் 15ம் தேதியோடு முடிவடையும் நிலையில், சில நடைமுறைகளை முடித்துவிட்டு தான் அனுப்ப முடியும். அதற்கு ஒருமாதகாலமாகும் என்று கூறியுள்ளது.
ஹமித் நிஹல் அன்சாரி மும்பையை சேர்ந்தவர். பாகிஸ்தானுக்குள் போலி ஆவணங்களை காட்டி நுழைய முயன்றவரை கைது செய்து 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது பாகிஸ்தான் நீதிமன்றம். அவர் 2015ம் ஆண்டு பாகிஸ்தான் கைது செய்தது. மேலும் இவர் 2012ம் ஆண்டு ஆன்லைனில் பழக்கப்பட்ட பெண்ணை சந்திப்பதற்காக ஆப்கானிஸ்தான் மூலம் பாகிஸ்தானுக்குள் நுழைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெஷாவர் உயர்நீதிமன்ற அமர்வில் அன்சாரியின் மூத்த வழக்கறிஞர் அரசு அன்சாரியை விடுவிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.மேலும் அன்சாரி டிசம்பர் 16ம் தேதி விடுதலை ஆக வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனை விசாரித்த நீதிமன்றம் ஏன் தாமதமாகிறது என்ற கேள்வியை அரசிடம் முறையிட்டது. இதற்கு அவரது விடுதலைக்கு தேவையான ஆவனங்களை தயாரிக்க ஒரு மாத காலம் ஆகும் அதுவரை அவரை சிறையில் வைத்திருக்க அனுமதி கேட்டது.
ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு அனைத்து நடைமுறைகளும் முடிந்த பின்பு அன்சாரி அதிகாரிகளால் வாகா எல்லையில் இந்திய காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவார் என்று பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.