This Article is From Feb 13, 2020

அனைத்து பயங்கரவாத தலைவர்களுக்கும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்க: இந்தியா வலியுறுத்தல்

சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத்திற்கு, தீவிரவாதத்திற்கு நிதியுதவி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் பாகிஸ்தானில் உள்ள நீதிமன்றம் தண்டனை வழங்கியதாக வெளியான ஊடக செய்திகளை நாங்கள் கண்டோம்.

மும்பை 26/11 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார்.

New Delhi:

மும்பை 26/11 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்துக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து, அந்நாட்டில் செயல்படும் அனைத்து பயங்கரவாத தலைவர்கள் மற்றும் குழுக்களுக்கும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்யுமாறு இந்தியா பாகிஸ்தானைக் கேட்டுக்கொண்டுள்ளது. 

சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத்திற்கு தீவிரவாதத்திற்கு நிதியுதவி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் பாகிஸ்தானில் உள்ள நீதிமன்றம் தண்டனை வழங்கியதாக வெளியான ஊடக செய்திகளை நாங்கள் கண்டோம். பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதை முடிவுக்குக் கொண்டுவருவது பாகிஸ்தானின் நீண்டகால சர்வதேச கடமையின் ஒரு பகுதியாகும்" என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FATF கூட்டத்திற்கு முன்னதாக இந்த முடிவு (பாகிஸ்தானால்) எடுக்கப்பட்டுள்ளது, இது கவனிக்கப்பட வேண்டியது. நிதி நடவடிக்கை பணிக்குழு அல்லது FATF என்பது பயங்கரவாத நிதியத்திற்கு எதிரான உலகளாவிய கண்காணிப்புக் குழுவாகும். பாகிஸ்தான் மற்ற அனைத்து பயங்கரவாத அமைப்புக்கள் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களிலிருந்து செயல்படும் தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா என்பதையும் பார்க்க வேண்டும்.

மேலும், மும்பை மற்றும் பதான்கோட் உள்ளிட்ட எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டோரை விரைவாக நீதிக்கு முன் கொண்டு வாருங்கள் "என்று இந்திய தரப்பு கேட்டுக்கொண்டாதகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டியது தொடர்பான வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஹபீஸ் சயீத்துக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீத். ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவரான இவர் மீது பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்து வழக்குகள் பதியப்பட்டது. 

இந்நிலையில், ஹபீஸ் சயீத்துக்கு எதிரான பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டியது தொடர்பான இருவேறு வழக்குகளிலும் பாகிஸ்தானில் உள்ள லாகூர் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் நேற்றைய தினம் தீர்ப்பளித்தது. அதில், இரண்டு வழக்கிலும் அவருக்கு தலா 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.15,000 அபராதம் விதித்தும், இதனை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

மும்பை தாக்குதலுக்குப் பிறகு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் ஹபீஸ் சயீத் தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டார். பாகிஸ்தானில் மட்டும் அவர் மீது 23 பயங்கரவாத வழக்குகள் உள்ளன. சர்வதேச மற்றும் இந்தியாவின் தொடர் அழுத்தங்கள் காரணமாக, அவ்வப்போது அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டாலும் சுதந்திரமாகவே இருந்து வந்தார். பயங்கரவாதத்துக்கான நிதி தடுப்பு அமைப்பு (எஃப்ஏடிஎஃப்) பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுத்த பிறகே, ஹபீஸ் சயீத் மீது பாகிஸ்தான் நடவடிக்கை மேற்கொண்டது. 

.