This Article is From Jan 16, 2019

களைகட்டிய பாலமேடு ஜல்லிக்கட்டு… இது பொங்கல் ஸ்பெஷல்!

மதுரை, பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.

களைகட்டிய பாலமேடு ஜல்லிக்கட்டு… இது பொங்கல் ஸ்பெஷல்!

ஹைலைட்ஸ்

  • செவ்வாயன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடந்தது
  • இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடக்கிறது
  • நாளை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்கும்

மதுரை, பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. நாற்றுக்கணக்கான மாடுகளும், அதை அடக்க மாடுபிடி வீரர்களும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்து கொண்டனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் முறையே 15, 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிக கெடுபிடியுடன் செய்யப்பட்டதால், எந்த வித அசம்பாவிதங்களும் இல்லாமல் முழு நாள் ஜல்லிக்கட்டுப் போட்டியும் சுமூகமாக நடந்து முடிந்தது. அதைப் போலவே இன்றும் ஜல்லிக்கட்டு எந்த விதப் பிரச்னைகளுமின்றி நடந்து முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக 800 காளைகறளும் மற்றும் 800-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. மதுரையைச் சுற்றியுள்ள திருச்சி, சிவகங்கை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாடுபிடி வீரர்கள் பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்து கொண்டு மாடுகளை அடக்க முயன்று வருகின்றனர். இன்று காலை முதல் பாலமேட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டி கோலகலமாக நடந்து வருகிறது.

ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளையை அடக்கும் வீரர்களுக்கும், யார் பிடியிலும் சிக்காமல் தப்பித்து ஓடும் மாடுகளுக்கும் பரிசு வழங்கப்படுகின்றது. ஆம்னி கார், பைக், தங்கம் மற்றும் வெள்ளிக் காசுகள், வழங்கப்படும் பரிசுகளில் அடக்கம்.
 

.