This Article is From Sep 04, 2019

‘ரூ.52,800 கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம்!’- அமெரிக்காவில் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தானது

'சமீபத்தில் தமிழகத்தில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 43 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகளை செய்வதற்கான 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தானது'

‘ரூ.52,800 கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம்!’- அமெரிக்காவில் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தானது

"தமிழக அரசு விமானத் துறை மற்றும் ராணுவத் துறை சார்ந்த நிறுவனங்களை ஊக்குவிக்கவும் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகிறது"

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாநிலத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். தற்போது அவர் அமெரிக்காவில் இருக்கிறார். இன்று அமெரிக்காவின் நியூயார்க்கில் முதலீட்டாளர்கள் முன்னிலையில் உரையாற்றினார் முதல்வர் பழனிசாமி.

“தொழில் செய்வதற்கான ஏதுவான சூழல் தமிழகத்தில் உள்ளது. வரி முறையில் இருக்கும் சலுகைகள், நிதி சார்ந்த மானியங்கள், மிகவும் திறன் வாய்ந்த மக்கள் சக்தி, தடையில்லாத மின்சார சப்ளை, மிகவும் உயர்ந்த உட்கட்டமைப்பு வசதி உள்ளிட்டவை தமிழகத்தை முதலீட்டாளர்களின் விருப்பத்திற்குரிய இடமாக மாற்றியுள்ளது. 

சமீபத்தில் தமிழகத்தில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 43 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகளை செய்வதற்கான 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. தொடர்ந்து தமிழகத்தில் முதலீடு செய்வதற்கும், தொழில் செய்வதற்குமான சூழல் இருக்கும் காரணத்தினால்தான் இவ்வளவு பெரிய முதலீடுகளைப் பெறுவதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டன.

தமிழக அரசு விமானத் துறை மற்றும் ராணுவத் துறை சார்ந்த நிறுவனங்களை ஊக்குவிக்கவும் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகிறது. முதலீட்டாளர்களுக்கு எதுவான சூழலை எனது அரசும், எனது மாநிலமும் கொடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேசினார். 

இந்த அமெரிக்க பயணத்தின்போது, தமிழக அரசுக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கும் இடையில் சுமார் 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் 52,800 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் வர வாய்ப்புள்ளது. மேலும் 22,760 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. நிதித் துறை, ஐடி துறை, மருந்து தயாரித்தல் துறை, வேதியல் துறை, சுகாதாரத் துறை, சைபர் பாதுகாப்புத் துறைகளில் முதலீடு செய்ய அமெரிக்க நிறுவனங்கள் முன்வந்துள்ளன. 
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.