This Article is From Jun 15, 2020

மாப்பிள்ளைக்கு கொரோனா! திருமணத்தில் பங்கேற்ற அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்!!

கொரோனாவால் நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகியவை முதல் மூன்று இடத்தில் இருக்கின்றன.

Advertisement
இந்தியா

டெல்லியில் மக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Palghar:

மாப்பிள்ளைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் திருமணத்தில் பங்கேற்ற அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த சுவாரசிய சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்திருக்கிறது.

கொரோனா பாதிப்பு காரணமாக திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்க 30 பேருக்கும் அதிகமானோருக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. இந்த திருமணமும் தனிநபர் இடைவெளி மற்றும் சுகாதாரத்துறை வகுத்துள்ள விதிப்படி நடத்தப்பட வேண்டும்.

இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் 3 நாட்களுக்கு முன்பாக திருமணம் ஒன்று நடந்துள்ளது.

இந்த நிகழ்வில் 63 பேர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், மாப்பிள்ளைக்கு இன்று கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, திருமணத்தில் பங்கேற்ற 63 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

பால்கர் மாவட்டத்தில் மட்டும் 1,911 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அவர்களில் 61 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகியவை முதல் மூன்று இடத்தில் இருக்கின்றன.

Advertisement

இதில், தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக ஜூன் 19-ம்தேதி முதல் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது.

டெல்லியில் மக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Advertisement