This Article is From Aug 18, 2018

ஜெயலலிதா மரணம்: தில்லி எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு ஆறுமுகசாமி கமிசன் சம்மன்

2017 செப்டம்பரில் தமிழக அரசால் அமைக்கப்பட்ட இவ்வாணையத்தால் அப்போலோ மருத்துவர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் ஏற்கனவே விசாரிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement
இந்தியா

2017, செப்டம்பரில் தமிழக விசாரணை ஆணையங்கள் சட்டம், 1952 இன்படி இவ்விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.

Chennai:

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிசன் தில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மூவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. மூவரும் தங்களுக்கு அனுப்பப்பட்ட சம்மனைப் பெற்றுக்கொண்டுள்ளனர் 

 

இதன்படி, நுரையீரலியல் துறையைச் சேர்ந்த ஜி.சி. கில்னானி, உணர்வகற்றியல் (மயக்கமருந்து) துறை பேராசிரியர் அஞ்சன் த்ரிக்கா, இதயவியல் துறைப் பேராசிரியர் நிதிஷ் நாயக் ஆகிய மூன்று மருத்துவர்களும் ஆகஸ்டு 23, 24 ஆகிய இரு நாட்களும் விசாரணை ஆணையத்தின் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். 

Advertisement

 

2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22 முதல் டிசம்பர் 5 வரை ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த காலகட்டத்தில் அவ்வப்போது இம்மருவத்துவர்கள் சென்னை வந்து ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி சோதித்து வந்தனர். 

Advertisement

 

2017 செப்டம்பரில் தமிழக அரசால் அமைக்கப்பட்ட இவ்வாணையத்தால் அப்போலோ மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் பலரும் ஏற்கனவே விசாரிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 75 பேர் சாட்சியங்களாகச் சேர்க்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளனர். ஏழு பேர் தாமாக முன்வந்து தகவல் அளித்துள்ளனர். இவர்களில் முப்பது பேரிடம் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை நடத்தியுள்ளது. 

Advertisement

 

எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி மரணத்தின் காரணத்தை அறிய சிபிஐ விசாரணை கோரி வந்ததை அடுத்து இந்த விசாரணை ஆணையம் தமிழக அரசால் கடந்த ஆண்டு செப்டம்பரில் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement