உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு வீட்டிலிருந்து 14 விஷப்பாம்புகள் பிடிக்கப்பட்டுள்ளன.
Kannauj (Uttar Pradesh): கிராமத்தில் வசிக்கும் மக்கள் 14 பாம்புகள் மற்றும் அதன் எண்ணற்ற முட்டைகளை பாம்பு பிடிப்பவர்கள் மீட்டெடுத்தனர். இந்த பாம்புகள் மிகவும் விஷம் கொண்டவை எனவும், இந்த பாம்புகள் கடித்தால் மரணம் ஏற்படும் எனவும் அவர்கள் கூறினார்கள்.
மேலும் பல பாம்புகள் அந்த வீட்டில் இருக்க வாய்ப்புள்ளதாக அவர்கள் கூறினார்கள்
இதனால், அவ்வீட்டில் வசிக்கும் 8 பேர் கொண்ட குடும்பம் அச்சத்தில் உள்ளது. மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் அந்தக் குடும்பம் ’ஆவாஸ் யோஜ்னா’ திட்டத்தின் மூலம் வீட்டினை பெற பலமுறை முயற்சித்தும் முடியாமல் போனதாக வருத்தம் தெரிவித்துள்ளார்கள்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறும்போது, கன்னோஜில் விஷப் பாம்புகளை பிடிக்க எந்த குழுவும் இல்லாததால், பாம்பு பிடிப்பவர்களை அழைக்கும் நிலை ஏற்பட்டதாக வருத்தம் தெரிவித்தனர்.