தனிமைப்படுத்தலில் இருந்த நபர் தற்கொலை! அடுத்தடுத்த சம்பவத்தால் பரபரப்பு! (Representational)
ஹைலைட்ஸ்
- தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்த நபர் ஒருவர் தற்கொலை
- மத்திய பிரதேசத்தில் 2,387 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
- இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 1,007 பேர் உயிரிழந்துள்ளனர்
New Delhi: மத்திய பிரதேசம் பானா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்த நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனிமைப்படுத்தல் மையத்திற்கு அந்த நபரின் பெற்றோர் வந்து பார்த்துவிட்டு சென்ற சிறிது நேரத்தில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பன்னா மாவட்டத்தைச் சேர்ந்த மஹேவா கிராமத்தைச் சேர்ந்த இவர், ஏப்ரல் 24 ஆம் தேதி மாநில சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து நண்பர்களுடன் திரும்பி வந்திருந்தார்.
இதையடுத்து, நண்பர்களுடன் அந்த நபர் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து, நேற்றைய தினம் அந்த நபரின் பெற்றோர்கள் தனிமைப்படுத்தல் மையத்திற்கு வந்து அவரை பார்வையிட்டு சென்றுள்ளனர். அதன்பின், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் கடந்த நான்கு நாட்களில் நடக்கும் நான்காவது தற்கொலை சம்பவம் ஆகும்.
முன்னதாக, கடந்த ஏப்.24ம் தேதி 30வயது தொழிலாளி ஒருவர் சித்தி மாவட்டத்தில் உள்ள பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதையடுத்து, அவர் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மத்திய பிரதேசத்தில் 2,387 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை 120 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 1,007 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பாதிப்பு எண்ணிக்கையானது 31,332 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.