ஹைலைட்ஸ்
- குழந்தைகளின் உணவில் புரதச்சத்து அவசியம்.
- இறைச்சி, கோழி, மீன், முட்டை, மற்றும் பருப்பு வகைகளில் புரதச்சத்து உள்ளது
- நட்ஸ் அல்லது விதைகளை ஸ்நாக்ஸாக சாப்பிடக் கொடுக்கலாம்.
பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் உணவு ஆரோக்கியமானதாக உள்ளதா அனைத்து ஊட்டச்சத்துகளும் குறிப்பாக புரதச்சத்தும் உணவில் கிடைக்குமாறு பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். புரதச்சத்து ஆரம்பகட்ட உடலின் முதன்மை கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டிற்கும் மிகவும் தேவை. உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் இயங்க புரதச்சத்து மிகவும் அவசியம். நம் உடலில் பாதி புரதம் தசை வடிவில் உள்ளது. மற்றவை எலும்பு, நகங்கள், முடி, குருந்தெலும்பு மற்றும் தோல் வடிவில் உள்ளது. புரோட்டீன்கள் சிக்கலான அமினோ அமிலங்கள் உருவாக்கப்பட்ட மூலக்கூறுகளாகும். சில அமினோ அமிலங்கள் உடலுக்கு அத்தியாவசியமானவை. அவை மனித உடலில் தயாரிக்க முடியாததால் உணவில் இருந்து பெறப்பட வேண்டும். புரதங்களை உருவாக்க உடலில் மற்ற அத்தியாவசிய அமினோஅமிலங்கள் தொகுக்கப்படுவது மிகவும் அவசியம். புரோட்டின் பல்வேறு வகையான செயல்பாடுகளை மேற்கொள்கின்றன. மேலும் சக்தியை வழங்குகின்றன.
புரதச் சத்துகளின் தேவையானது வயது, உடலியல் நிலை, உளவியல் நிலை மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றுடன் வேறுபடுகின்றன. இருப்பினும் குழந்தைகள் வளரும் வயதிலும் பெண்களின் கர்ப்ப காலத்திலும் மிகவும் அதிக அளவு புரதங்கள் தேவை. பால், இறைச்சி, கோழி, மீன், முட்டை, மற்றும் பருப்பு வகைகள் போன்றவை புரதச்சத்து அதிகமுள்ள உணவு வகைகள் ஆகும். இறைச்சியில் புரதச்சத்தும் உடலுக்குத் தேவையான அமினோ அமிலமும் உள்ளது. மறுபுறம் காய்கறிகளிலும் புரதங்கள் உள்ளது. ஆனால் இறைச்சியில் உள்ள அளவை விட குறைவாக உள்ளது. முக்கியமான அமினோ அமிலங்கள் குறைவாகவே உள்ளது. சிறுதானியங்கள், பருப்பு வகைகள் கலந்து எடுத்து கொள்ளும் போது புரதச்சத்தின் அளவை பூர்த்தி செய்ய முடியும்.
குழந்தைகளுக்கு தேவையான புரதச்சத்து உள்ள உணவுப் பொருட்கள்
1. முட்டை: முட்டையில் புரதச்சத்து அதிகமாக உள்ளது உடலுக்குத் தேவையான அமினோ அமிலமும் அதிகமாக உள்ளது. சுவையும் ஊட்டச்சத்தும் ஒருங்கே இணைந்த உணவாகும். காலை உணவாகவோ அல்லது மாலை நேரத்தில் ஸ்நாக்ஸாகவோ செய்து கொடுக்கலாம்.
2. சிக்கன்: சுவையான புரதச் சத்தும் இதில் உள்ளது. சிக்கன் நிச்சயமாக குழந்தைகளின் டயட்டில் இருக்க வேண்டிய ஒன்று. சிக்கன் குழந்தைகளின் இதயத்திற்கும் தசசைகளின் வளர்ச்சிக்கும் செயல்பாட்டுக்கும் மிகவும் அவசியம்.
3. பருப்பு மற்றும் அரிசி: பருப்பு மற்றும் அரிசியில் புரதசத்து நிறைந்துள்ளது. ஆனால் அமினோ அமிலங்கள் குறைவாக உள்ளது. முழு சாப்பாடாக காய்கறிகளுடன் இணைந்து சாப்பிடுவது ஆரோக்கியமானது. குழந்தைகளுக்கு பருப்புடன் நெய் சேர்த்து சாப்பிட வைப்பது வளர்ச்சிக்கு கூடுதல் ஊட்டச்சத்தினை கொடுக்கும்.
4. டோஃபு: சோயா பீன்ஸினால் செய்யப்படும் டோஃபுவில் புரதச்சத்து அதிகமுள்ளது. வெஜிட்டேரியன் மற்றும் வீகன் டயட்டில் உள்ளவர்கள் இதை பயன்படுத்தலாம். இதயத்திற்கும் நல்லது.
5. மீன் : கொழுப்புச் சத்துள்ள மீன்களான சாலமன், ட்யூனா ஆகியவற்றில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ் அதிகமுள்ளது. மூளை வளர்ச்சிக்கு உதவக்கூடியது. மீனும் அடிக்கடி செய்து கொடுப்பது மிகவும் அவசியம்.
6. நட்ஸ் மற்றும் விதைகள் : கொட்டை மற்றும் விதைகளில் புரதச்சத்து உள்ளது. அன்றாடம் ஒரு கைப்பிடி அளவு நட்ஸ் அல்லது விதைகளை ஸ்நாக்ஸாக சாப்பிடக் கொடுக்கலாம்.
Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.