டெல்லி தல்கதோரா உள்அரங்கத்தில்2020 மாணவர்களுடனான கலந்துரையாடல் நடைபெற்றது.
New Delhi: தேர்வுக்கு தயாராகும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி டெல்லியில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தி வருகிறார். ஆயிரக்கணக்கான மாணவர்கள் மத்தியில் பேசிய அவர் எந்த ஒரு ஒளிவு மறைவும் இல்லாமல் நண்பர்களாகவே பேசலாம் என்று மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.
தவறுகள் நடக்கலாம். என்னை எடுத்துக்கொண்டால், நான் எதேனும் தவறாக பேசிவிட்டால், ஊடக நண்பர்கள் அதனை பெரிதும் விரும்புவார்கள் என்று கூறினார்.
"உங்கள் பெற்றோரின் கைகளில் இருந்து சில வேலைகளை எடுத்துக் கொண்டு, நான் இந்த திட்டத்தை நடத்த வேண்டும் என்று நினைத்தேன் - எல்லாவற்றிற்கும் மேலாக நான் உங்கள் குடும்பத்தின் ஒரு பகுதியாக இருக்கிறேன் அல்லவா?" என்றார்.
தொடர்ந்து, அவரிடம் ஒரு மாணவர் முதல் கேள்வியைக் கேட்டார். போர்டு தேர்வுகள் குறித்த சிந்தனை தனது மனநிலையை முடக்குவதாக தெரிவித்தார். இதற்கு பதிலளித்தபிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆண்டு சந்திராயனின் லேண்டரை நிலவில் தரையிறக்கத் தவறியதை அடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தங்கள் பதற்றத்தை எவ்வாறு சமாளித்தார்கள் என்று குறிப்பிட்டார்.
நமது தோல்வியில் இருந்து கூட வெற்றியின் படிப்பினைகளைக் கற்றுக்கொள்ளலாம். நமது அவநம்பிக்கை நம்மை தோற்கடிக்க அனுமதிக்க கூடாது என்று அவர் கூறினார்.
இந்த கலந்துரையாடலின் தொடக்கத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்த வருடாந்திர நிகழ்வின் மூலம் குழந்தைகளுடன் உரையாடுவது "அவரது இதயத்தை தொட்ட நிகழ்ச்சி" என்று குறிப்பிட்டார்.
பிரதமர் மோடி தலைமையில் 3வது முறையாக நடக்கும் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி. இதில் 2000 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். இதற்காக 1,050 மாணவர்கள் கட்டுரை போட்டி மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.