டி-சீரிஸ் நிறுவனத்தின் தலைவர் பூஷன் குமார் படத்தில் ப்ரணிதி இணைந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ஹைலைட்ஸ்
- ஷரதா கபூர் விலகல் குறித்த எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை
- உண்மையில் பெருமையாக உள்ளது என்று ரீட்விட் செய்துள்ளார் ப்ரணிதி சோப்ரா
- சாய்னா நேவாலின் பயோபிக்கை அமோல் க்ப்தே இயக்குகிறார்
பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் பயோபிக் படமாக்கப்படவுள்ளது. இதில் முன்னதாக ஷரதா கபூர் நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது அவருக்கு பதிலாக ப்ரணிதி சோப்ரா நடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. டி-சீரிஸ் நிறுவனத்தின் தலைவர் பூஷன் குமார் படத்தில் ப்ரணிதி இணைந்த அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் ஷரதா கபூர் விலகல் குறித்த எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. எனினும் வர்த்தக பிரிவை சேர்ந்த தரன் ஆத்ர்ஷ், ஷரத கபூருக்கு பதிலாக ப்ரணிதி மாறியிருப்பதை உறுதி செய்தார்.
ஷரதா கபூர் தனது பனிச்சுமை காரணமாக இந்த படத்திலிருந்து விலகியுள்ளார். ஆனால் இன்னும் ஷரத கபூர் தரப்பு இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் ப்ரணிதி சோப்ரா பூஷன் குமாரின் ட்விட்டை "உண்மையில் பெருமையாக உள்ளது" என்று ரீ ட்வுட் செய்துள்ளார்.
ஷரதா கபூர் தற்போது அமோல் க்ப்தே இயக்கும் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். அதன் படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்கியது. ஆனால் படப்பிடிப்பு துவங்கி இரண்டே நாளில் டெங்குவால் பாதிக்கப்பட்டதால் அவர் ஏப்ரல் வரை ஓய்வு எடுக்க பரிந்துரைக்கப்பட்டார். அதனால் ஏப்ரல் முதல் படப்பிடிப்புக்கு திரும்பும் ஷரதா கபூர் இந்த பயோபிக்கை வேலைப்பளு காரணமாக மறுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.