வண்டுகளின் தாக்குதலால் நமச்சல் மற்றும் எரிச்சலுக்கு ஆளான காவல்துறையினர்
வடகிழக்கு பாரிஸில் உள்ள ஒரு காவல் நிலையத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து காலவரையின்றி மூடியிருக்கின்றனர், அந்த காவல் நிலையத்தை சார்ந்த காவல்துறையினர். காரணம் என்னவென்றால், வண்டுகளின் தாக்குதல்.
பாரிஸ் நகரின் 19வது பிரிவில் அமையப்பெற்றுள்ள அந்த காவல் நிலையத்தின் கதவுகள் இப்படியான பாதாகையை ஏந்தியவாறு மூடப்பட்டுள்ளது, "அடுத்த அறிவிப்பு வரும்வரை காவல் நிலையம் மூடப்பட்டே இருக்கும்". அந்த காவல் நிலையத்தை தன் கட்டுக்குள் வைத்துள்ள ஒரு காவல்துறையினர் கூட்டுறவு அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில் "காவல் நிலையம், ரத்தம் உறிஞ்சும் வண்டுகளால் முற்றுகையிடப்பட்டதால், அங்குள்ள வேலை நிலை மிகவும் சகித்துக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது" என்று எழுதியுள்ளனர்.
இந்த பிரச்னை கடந்த மூன்று வாரங்களாக அங்கு தொடர்ந்துள்ளது. பல காவல் அதிகாரிகள் அந்த வண்டுகளின் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வண்டுகளின் கடியால் நமச்சல் மற்றும் எரிச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என்று அங்குள்ள பிரான்ஸ் ப்ளூ பாரிஸ் வானொலி மையம் கூறியுள்ளது. வேலை முடித்து வீடு திரும்பிய அதிகாரிகளை கூட பின்தொடர்ந்து அவர்கள் வீட்டில் உள்ள குழந்தைகளை கூட தாக்கியுள்ளதாம் இந்த வண்டுகள்.
இது குறித்து அந்த கூட்டுறவு அதிகாரிகள் கூறுகையில், அந்த பகுதியில் வாரங்களுக்கு முன்னதாகவே வண்டுகளை அகற்றும் பணி நடந்திருக்க வேண்டும். ஆனால் இன்னும் அதுமாதிரியான எந்த பணியும் அங்கு நடைபெறவில்லை. இதுகுறித்து அந்த அமைப்பின் அதிகாரிகள், உள்துறை அமைச்சர் கிறிஸ்டோப் காஸ்டானரை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளனர்.
Click for more
trending news