ஹைலைட்ஸ்
- பாரீஸில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது
- இதுவே ரயில் தரைபுறல்வதற்குக் காரணமாகும்
- பாரீஸில் தொடர்ந்து அரசுத் துறைகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன
Paris: பிரான்ஸ் நாட்டுத் தலைநகர் பாரீஸில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால், அந்நகரில் ஓடும் ரயில் ஒன்றின் 6 பெட்டிகள் தரைபுறண்டுள்ளது. இதனால் 7 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாரீஸில் ஓடும் புறநகர் ரயிலான ஆர்.ஈ.ஆர் தான் கன மழையால் தரைபுறண்டுள்ளது. இது குறித்து பிரான்ஸ் நாட்டு போக்குவரத்துத் துறை அமைச்சர் ஓர்சே, 'ஆர்.ஈ.ஆர் பி ரயிலின் ஆறு பெட்டிகள் தான் தரை புறண்டுள்ளது. இந்த விபத்தினால் பெட்டிகள் ரயிலின் வழித் தடத்திலிருந்து விலகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் 7 பேருக்கு மட்டுமே காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கும் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது' என்று தகவல் தெரிவித்துள்ளார்.
பாரீஸ் நேரப்படி காலை 5 மணி அளவில் இந்த ரயில் விபத்து நடந்துள்ளது. பாரிஸில் தொடர்ந்து சில நாட்களாக மழை விடாமல் பெய்து வருகிறது. இதனால் அங்கிருக்கும் அரசு துறைகள் அனைத்தும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.