Read in English
This Article is From Aug 05, 2020

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இம்மாத இறுதியில் தொடங்க வாய்ப்பு!

பத்திரிக்கையாளர்களை பொறுத்த அளவில் மாநிலங்களவையில் 7 நிருபர்களும், மக்களவையில் 15 நிருபர்களும் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிய வருகின்றது.

Advertisement
இந்தியா Edited by

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட்-இறுதி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Highlights

  • நாடாளுமன்ற தொடர்ஆகஸ்ட்-இறுதி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கும்
  • மக்களவை மற்றும் மாநிலங்களவைகளில் சுகாதார நெறிமுறைகளும் பின்பற்றப்படும்
  • கூட்டத் தொடரில் பத்திரிக்கையாளர்கள் குறைந்த அளவிலேயே அனுமதி
New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 18.55 லட்சமாக அதிகரித்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட்-இறுதி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களவை மற்றும் மாநிலங்களவைகளில் சுகாதார நெறிமுறைகளும் வழிகாட்டுதல்களும் பின்பற்றப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கூட்டத் தொடரில் பத்திரிக்கையாளர்கள் குறைந்த அளவிலேயே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிய வருகின்றது. கொரோனா முழு முடக்கத்திற்குப் பின்னர் நடைபெறும் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் இதுவேயாகும்.

Advertisement

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மழைக்கால அமர்வின் போது செயல்படும் என்றாலும், அவை ஒரு நாளைக்கு நான்கு மணி நேரத்திற்கு மட்டுமே செயல்படும் என்று தகவல் தெரிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதலில் மக்களவை கூட்டத் தொடரும் அதைத் தொடர்ந்து மாநிலங்களவை கூட்டத் தொடரும் நடைபெறும் எனப்படுகிறது.

மக்களவை உறுப்பினர்களுக்கான கூட்டம் முடிந்த பின்னர் அவர்கள் நாடாளுமன்றத்தைவிட்டு வெளியேறுவார்கள். அதன் பின்னர் மாநிலங்களவை கூட்டம் நடைபெறும்.

Advertisement

இந்த இரு அவைகளின் கூட்டம் குறித்து, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் விரிவான கலந்துரையாடலை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பத்திரிக்கையாளர்களை பொறுத்த அளவில் மாநிலங்களவையில் 7 நிருபர்களும், மக்களவையில் 15 நிருபர்களும் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிய வருகின்றது.

Advertisement