This Article is From Jun 20, 2019

நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரையின்போது காவிரி பிரச்னையை எழுப்பிய திமுக எம்.பி.க்கள்!!

நாடாளுமன்றத்தில் காவிரி நீரை வழங்க வேண்டும் என வலியுறுத்தும் பதாகைகளை தாங்கி, தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும் என திமுக எம்பிக்கள் கோஷங்களை எழுப்பினர்.

நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரையின்போது காவிரி பிரச்னையை எழுப்பிய திமுக எம்.பி.க்கள்!!

திமுக எம்.பி.க்களின் கோஷத்தால் நாடாளுமன்றத்தில் பரபரப்பு காணப்பட்டது.

ஹைலைட்ஸ்

  • கூட்டுக்குழு கூட்டம் நாடாளுமன்றத்தில் இன்று நடந்தது
  • குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்றினார்
  • ராகுலும் - ஸ்மிருதி இரானியும் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர்.
New Delhi:

நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத்   கோவிந்த் உரையாற்றிக் கொண்டிருந்தபோது திமுக எம்.பி.க்கள் காவிரி பிரச்னையை எழுப்பினர். இதனால் அவையில் பரபரப்பு காணப்பட்டது. 

தமிழகத்திற்கு காவிரி நீரை வழங்க வேண்டும் என வலியுறுத்தும் பதாகைகளை ஏந்திய திமுக எம்.பி.க்கள், காவிரி நீரை தரக்கோரி முழக்கங்களை எழுப்பினர். அவர்களை துணை குடியரசு தலைவர் சமாதானப்படுத்த முயற்சித்தார். 

குடியரசு தலைவர் உரையாற்றிக் கொண்டிந்தபோது,  பிரதமர் மோடியின் அனைத்து மாநிலங்களுக்கான வளர்ச்சி என்ற கொள்கையை பாராட்டுவதாக கூறினார். இதற்கு பாஜக எம்பிக்கள் மேஜையை பலமாகத் தட்டி வரவேற்பு தெரிவித்தனர். 

ரஃபேல் ஜெட்விமானம், அபாச்சி ரக ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட விவகாரத்தை குடியரசு தலைவர் பேசியபோது, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி உறுப்பினர்கள் மேஜையை தட்டினர். 

தனது பேச்சை முடித்துக் கொண்டதும் குடியரசு தலைவர் எம்.பி.க்கள் இருக்கும் இடம் சென்று வாழ்த்துக்களை தெரிவித்தார். 

குடியரசு தலைவர் சென்ற பின்னர், எதிர்க்கட்சி முக்கிய எம்.பி.க்கள் அனைவரும் ராகுல் காந்தியிடம் சென்று பேசத் தொடங்கினார். அப்போது அவரது தாயார் சோனியா காந்தி உடன் இருந்தார். நேற்றுதான் ராகுல் தனது பிறந்த நாளை கொண்டாடியிருந்தார். 

மற்றொரு சுவாரசிய சம்பவமும் நாடாளுமன்றத்தில் இன்று நடந்தது. அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானியிடம் ராகுல் காந்தி தோல்வி அடைந்தார். இன்று இருவரும் நேருக்கு நேராக சந்தித்தபோது இருவரும் வாழ்த்து கூறிக் கொண்டனர். 

.