हिंदी में पढ़ें বাংলায় পড়ুন Read in English
This Article is From Aug 06, 2019

நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்! 2 யூனியன் பிரதேசங்களாக பிரிகிறது ஜம்மு காஷ்மீர்!!

மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் பெரும்பான்மைக்கு போதிய பலம் இருந்ததால் மசோதா நிறைவேறியுள்ளது.

Advertisement
இந்தியா Written by , Edited by
New Delhi:

ஜம்மு காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வகை செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதுதொடர்பாக குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்ட பின்னர் 2 யூனியன் பிரதேசங்களாக ஜம்மு காஷ்மீர் பிரிக்கப்படும். 

ஜம்மு காஷ்மீருக்கு இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட சிறப்பு அந்தஸ்தை அரசியலமைப்பு சட்டம் பிரிவு 370 வழங்குகிறது. இதனை ரத்து செய்து உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று அறிவிப்பு வெளியிட்டார். 

இதனை தவிர்த்து காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வகை செய்யும் மசோதா நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் இந்த மசோதாவை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். 

Advertisement

இதற்கு ஆதரவாக 366 வாக்குகளும், எதிர்த்து 66 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 

இந்த மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு நடைமுறைக்கு வரும். 

Advertisement
Advertisement