Read in English
This Article is From Mar 05, 2020

ராகுல் காந்திக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம்!! - சந்தேகம் எழுப்பும் பாஜக!!

6 நாட்கள் முன்பு தான் ராகுல் காந்தி இத்தாலி நாட்டில் இருந்து திரும்பி வந்தார். அதனால் அவர் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை பரிசோதனை செய்ய வேண்டும் என பாஜக எம்.பி ரமேஷ் பிதூரி தெரிவித்துள்ளார்.

Advertisement
இந்தியா Edited by

கொரோனோ வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை ராகுல் காந்தி தானே முன்வந்து சோதனை செய்து கொண்டு நாடாளுமன்றத்திலும் அறிவிக்க வேண்டும். (File)

Highlights

  • ராகுலுக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் - பாஜக எம்.பி., சந்தேகம்
  • இத்தாலியில் இருந்து வந்த பலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி
  • 6 நாட்கள் முன்பு தான் ராகுல் காந்தி இத்தாலி நாட்டில் இருந்து திரும்பினார்
New Delhi :

ராகுல் காந்தி 6 நாட்கள் முன்பு தான் இத்தாலி நாட்டிற்கு சென்று வந்ததால், கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை அவர் பரிசோதனை செய்து கொண்டு யாருக்கும் பரவாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பாஜக எம்.பி. நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

டெல்லியை சேர்ந்த பாஜக எம்.பி., ரமேஷ் பிதூரி மக்களவையில் பேசியதாவது, இத்தாலியில் இருந்து வந்த பலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 நாட்கள் முன்பு தான் ராகுல் காந்தி இத்தாலி நாட்டில் இருந்து திரும்பி வந்தார். அதனால் அவர் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை பரிசோதனை செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கூறினார். 

முன்னதாக, நேற்றைய தினம் வன்முறையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு டெல்லியை ராகுல் காந்தி நேரில் சென்று பார்வையிட்ட போதும், ரமேஷ் பிதூரி இதேபோன்ற கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

Advertisement

தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் பேசிய ரமேஷ் பிதூரி, எம்.பிக்கள் அனைவரும் மக்களை சந்திக்க வேண்டும். அதனால், ராகுல் காந்தி அருகே இருக்கும் எம்.பிக்களுக்கும் வைரஸ் தொற்று ஏற்படலாம். இத்தாலியில் இருந்து திரும்பி வந்தவர்கள் பலருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், ராகுல் காந்தி தானே பரிசோதனை செய்து நாடாளுமன்றத்திலும் தெரிவிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். 

முன்னதாக, மகாராஷ்டிரா எம்.பி ஒருவர் அவையில் முகமூடி அணிந்தபடி கேள்வி எழுப்பினார். 

Advertisement

இதேபோல், நேற்றைய தினம் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் ரமேஷ் பிதூரி கூறியதாவது, ராகுல் வைரஸ் பாதிப்புக்கான எந்தவொரு முன்னெச்சரிக்கையும் எடுக்காமல், வன்முறையில் ஏற்பட்ட பகுதிகளில் மக்களை சென்று சந்திக்கிறார். 

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும்.. முதலில் நீங்கள் சிஏஏ தொடர்பாக மக்களை தவறாக வழிநடத்தினீர்கள். உங்களது தாயார் இந்த பக்கம் அல்லது அந்த பக்கம் தான் மக்கள் இருக்க வேண்டும் என்று கூறினார்..முதலில் வன்முறையை தூண்டிய நீங்கள் தற்போது ஆறுதல் தெரிவிக்க செல்கிறீர்கள். 

Advertisement

டெல்லிக்கு செல்வதற்கு முன் உங்களிடம் நான் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன். கடந்த 6 நாட்களுக்கு முன் இத்தாலி நாட்டில் இருந்து நீங்கள் வந்துள்ளீர்கள். விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை எடுத்து கொண்டீர்களா? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நீங்கள் எடுத்துள்ளீர்களா? அல்லது கொரோனா வைரசை பரப்ப டெல்லிக்கு செல்கிறீர்களா? என்று அவர் கேள்வி எழுப்பினார். 

இத்தாலியில் வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 79 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2,500க்கும் மேற்பட்டவர்களுக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Advertisement

சீனாவில் மட்டும் இதுவரை 2,981 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும், பாஜகவினர் தொடர்ந்து, ராகுல் காந்தியை அவரது வெளிநாட்டு பயணம் குறித்து விமர்சித்து வருகின்றனர். 

Advertisement