மக்களவை கூட்டத் தொடர் ஜூன் 17-ம்தேதி தொடங்குகிறது.
New Delhi: மாநிலங்களவை ஜூன் 20-ம்தேதி தொடங்கி ஜூலை 26-ம்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநிலங்களவை செயலர் தீபக் வர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மாநிலங்களவை கூட்டத்தை ஜூன் 20-ம்தேதி கூட்டுமாறு குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார். ஜூலை 26-ம் தேதி வெள்ளிக்கிழமையுடன் மாநிலங்களவை கூட்டத் தொடர் முடிகிறது' என்று கூறப்பட்டுள்ளது.
மக்களவையின் முதல் கூட்டத் தொடர் ஜூன் 17-ம்தேதி தொடங்குகிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கூட்டத் தொடர் தொடங்கிய முதல் 2 நாட்களில் பதவியேற்றுக் கொள்கின்றனர்.
நாடாளுமன்றத்தின் 2 அவைகளையும் சேர்த்து ஜூன் 20-ம்தேதி கூட்டம் நடைபெறுகிறது. இதில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். இந்த கூட்டத் தொடரின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.