குழந்தையின் வருகை நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Auckland, New Zealand: நாடாளுமன்றத்தில் தனது ஒன்றரை மாத பச்சிளம் குழந்தைக்கு, சபாநாயகர் பாலூட்டும் காட்சி இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.
நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் சபாநாயகராக ட்ரேவர் மல்லார்ட் இருந்து வருகிறார். அவர் தனது ஒன்றரை வயது குழந்தையை நாடாளுமன்றத்திற்கு புதன் அன்று அழைத்து வந்தார். அவையில் உறுப்பினர்கள் எழுந்து பிரச்னைகளை பேசிக் கொண்டிருந்தபோது, மல்லார்டின் குழந்தை அழத் தொடங்கியது.
இதையடுத்து, குழந்தைக்கு பாட்டிலில் கொண்டு வந்த பாலை ஊட்டி, அதனை சபாநாயகர் சமாதானம் செய்தார். இதனால் பெரும்பாலான உறுப்பினர்களின் கவனம் பச்சிளம் குழந்தையின் மீது திரும்பியது.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணைய தளத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. குழந்தையின் மீது அன்பு மழை பொழிந்து, நெட்டிசன்கள் கமென்ட் செய்துள்ளனர்.
நியூசிலாந்தை பொறுத்தளவில் குழந்தை பிறந்தால் தந்தைக்கு சம்பளத்துடன் கூடிய 22 வாரகால விடுமுறை வழங்கப்படுகிறது. இதனை அடுத்த ஆண்டு முதல் 26 வாரங்களாக அதிகரிக்க பிரதமர் ஜேசிந்தா ஆர்டர்ன் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த 2018-ல் அமெரிக்கா சென்றிருந்த நியூசிலாந்து பிரதமர் ஆர்டென், தனது பச்சிளம் குழந்தையை கையில் வைத்தவாறு பேசினார். இந்த காட்சிகள் அப்போது வைரலானது குறிப்பிடத்தக்கது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)