This Article is From Aug 08, 2018

கருணாநிதிக்காக நாடாளுமன்றம் ஒத்திவைப்பு - அங்கும் வரலாறு படைத்தார் கலைஞர்

நேற்று கருணாநிதியின் மறைவை அடுத்து, இன்று நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது

கருணாநிதிக்காக நாடாளுமன்றம் ஒத்திவைப்பு - அங்கும் வரலாறு படைத்தார் கலைஞர்
New Delhi:

கலைஞர் கருணாநிதிக்கு இன்று மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அஞ்சலி தெரிவிக்கப்பட்டு, இன்றைய நாள் செயல்பாடுகள் ஒத்திவைக்கப்பட்டது. 5 முறை முதலமைச்சரான கருணாநிதி, பாராளுமன்ற உறுப்பினராக இருந்தது இல்லை. பாராளுமன்ற உறுப்பினர் அல்லாத ஒருவரின் மறைவுக்காக மக்களவை மற்றும் மாநிலங்களவை செயல்பாடுகள் ரத்து செய்யப்படுவது இதுவே முதல்முறை. இதிலும் வரலாறு படைத்துவிட்டார் கலைஞர் கருணாநிதி.

நேற்று கருணாநிதியின் மறைவை அடுத்து, இன்று நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ராஜாஜி அரங்கில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு நேரில் வந்து மரியாதை செலுத்தினார், பிரதமர் மோடி. நேற்று இரவே மேற்கு வங்க முதல்வர் நேரில் வந்து மரியாதை செலுத்தினர். மேலும் பல ராகுல் காந்தி உள்ளிட்டு தேசிய அரசியல் தலைவர்கள், கேரள, கர்நாடக, ஆந்திரா மற்றும் தெலங்கானா முதல்வர்கள் சென்னை வருகின்றனர்.

அதே நேரம், மெரினாவில் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட இடம் தேர்வு செய்வது குறித்து பொதுப் பணித்துறையினருடன், தி.மு.க தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

.