கடந்த 2 ஆண்டுகளாக குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 21-ம்தேதி தொடங்கி ஜனவரி முதல் வாரத்தில் முடிக்கப்பட்டது.
New Delhi: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18-ம்தேதி தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்றம் நடைபெறும் தேதிகளை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு கூடி முடிவு செய்யும். தற்போது இதன் தலைவராக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளார்.
இந்த நிலையில், இன்று அவரது இல்லத்தில் குழு கூடியது. இதில் குளிர்கால கூட்டத்தொடரை நவம்பர் 18-ம் தேதி தொடங்கி ஒரு மாதத்திற்கு நடத்தலாம் என முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2 ஆண்டுகளாக குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 21-ம்தேதி தொடங்கி ஜனவரி முதல் வாரத்தில் முடிக்கப்பட்டது.
நிலுவையில் உள்ள பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றுவதை தவிர்த்து, இரண்டு முக்கிய அவசர சட்டங்களை சட்டமாக மாற்றும் முயற்சியில் மத்திய அரசு இந்த கூட்டத் தொடரில் ஈடுபடும் என தெரிகிறது.
உள்நாட்டு கம்பெனிகளுக்கான கார்ப்பரேட் வரிக்குறைப்பு, மின்சார சிகரெட் போன்ற பொருட்களுக்கு தடை விதிப்பு ஆகிய 2 அவசர சட்டங்களை மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்தது.