Read in English
This Article is From Aug 11, 2018

இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: எங்கு, எப்போது, எப்படிப் பார்ப்பது?

இந்திய நேரப்படி பிற்பகல் 1:32 மணிக்கு தொடங்கி ஐந்து மணி வரை இந்தப் பகுதி சூரிய கிரகணம் நிகழும். இவ்வாண்டின் கடைசி சூரிய மறைப்பு நிகழ்வாக இது இருக்கும். இதனை வெறும் கண்களால் பார்ப்பது கேடு விளைவிக்கும்.

Advertisement
இந்தியா

பகுதி சூரிய மறைப்பு: இந்திய நேரப்படி பிற்பகல் 1:32க்குத் தொடங்கும்

New Delhi:

இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணத்தை உலகம் இன்று காண இருக்கிறது. பகுதி சூரிய மறைப்பான இதில் நிலவின் நிழல் சூரியன் மீது விழுவதால் ஏற்படுகிறது. இதனால் வானில் சூரியன் பிறை வடிவில் தெரியும். இந்திய நேரப்படி பிற்பகல் 1:30 மணிக்குத் தொடங்கும் இக்கிரகணம் மாலை 5 மணி வரை நீடிக்கும். இதனைத் தக்க உபகரணங்களின் உதவியின்றி வெறும் கண்களால் பார்ப்பது ஆபத்தாகும்.

எங்கு தெரியும்?

இப்பகுதி சூரிய கிரகணம் வடக்கு, கிழக்கு ஐரோப்பா, வட அமெரிக்காவின் வடக்குப் பகுதிகள், ஆசியாவின் சில வடக்கு, மேற்கு பகுதிகளில் தெரியும். இந்தியாவைப் பொருத்தவரை இதனைத் தெளிவாகக் காண இயலாது.

Advertisement

எப்படிப் பார்ப்பது?

சூரியனை நேரடியாக இக்கிரணம் ஏற்பட்டுள்ள சமயத்தில் வெறும் கண்களால் பார்ப்பது கண்களுக்கு பாதிப்பை உண்டாக்கும். தொலைநோக்கி, பைனாகுலர்களின் இதனைப் பார்ப்பது மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு ஒரு நொடியில் கண்பார்வையையே இழக்க நேரிடலாம்.
 

இதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சோலார் ஃபில்டர்கள் உள்ள கிரகணக் கண்ணாடிகள், கையில் பிடித்தபடி பார்க்க உதவும் சோலார் நோக்கிகள் ஆகியவற்றின் வழியாக மட்டுமே இக்கிரணத்தைக் காண வேண்டும்.

Advertisement

வீட்டிலுள்ள கூலிங் கிளாசுகள், பைனாகுலர், கேமரா, தொலைநோக்கி போன்ற எந்த சாதனங்களைக் கொண்டும் இதனைப் பார்க்க வேண்டும் என்று நாசா விண்வெளி ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

சூரிய கிரகணம் குறித்த சில மூடநம்பிக்கைகள்:

இந்தியாவில் சூரிய கிரகணமானது அமங்கலமாகப் கருதப்படுகிறது. இந்நேரத்தில் கிருமிகள் அதிகம் பரவும் என்று நம்பி அந்நேரத்தில் சமைப்பது சாப்பிடுவதைத் தவிர்க்கின்றனர். வெளியிலும் செல்வதில்லை. இதிலிருந்து தங்களைப் பாதுகாக்க வழிபாடு, குளியல் எனப் பலவற்றைக் கடைப்பிடிக்கின்றனர். மேலும் கர்ப்பிணிகளுக்கும் வயிற்றில் உள்ள குழந்தைகளுக்கும் கிரகணம் ராசியற்றது எனக் கருதப்படுகிறது. ஆனால் இவையனைத்துமே எவ்வித அறிவியல் அடிப்படையுமற்ற மூடநம்பிக்கைகளே.

Advertisement