This Article is From Jun 27, 2018

ஆளுநர் ஆய்வை எதிர்த்து போராட கட்சிகளுக்கு உரிமை உண்டு: புதுச்சேரி முதல்வர்

அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டங்களை குற்றச்செயல் என்று கூறுவதற்கும், தடுப்பதற்கும் ஆளுநருக்கோ, துணை ஆளுநருக்கோ உரிமை இல்லை

ஆளுநர் ஆய்வை எதிர்த்து போராட கட்சிகளுக்கு உரிமை உண்டு: புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரி: ஆளநர் ஆய்வு மேற்க்கொள்ளும் போது, அவரை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட அரசியல் கட்சிகளுக்கு உரிமை உண்டு என்று புதுச்சேரி முதலமைச்சர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார்

"அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டங்களை குற்றச்செயல் என்று கூறுவதற்கும், தடுப்பதற்கும் ஆளுநருக்கோ, துணை ஆளுநருக்கோ உரிமை இல்லை" என்று அவர் தெரிவித்தார். ராஜ் பவனில் உள்ள அலுவலகத்தில் ஆளுநர் பணியாற்றுவதற்கு இடையூறாக செயல்பட்டால் மட்டுமே, அவை குற்ற செயலாக கருத முடியும் என்று கூறினார்.

மேலும், புதுச்சேரி துணை ஆளுநர் கிரண் பேடியுடன் தனக்கு பிரச்சனைகள் இருப்பதாகவும், அரசு நிர்வாகத்தில் தலையிட ஆளநருக்கு நேரடி அதிகாரம் இல்லை எனவும் கூறினார்.

புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் தலையிட்டு வரும் துணை ஆளுநர் கிரண் பேடி குறித்து பிரதமரிடம் ஆலோசிக்க உள்ளதாக முதலமைச்சர் நாரயணசாமி தெரிவித்தார்.

"புதுச்சேரி துணை ஆளுநரின் நடவடிக்கைகள் குறித்து பிரதமருடன் ஆலோசிக்க அனுமதி கோரியுள்ளேன்" என்றார்.



(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)

.