This Article is From Dec 12, 2018

மத்திய பிரதேசத்தில் முதல்வரை கட்சிதான் தேர்வு செய்யும் - NDTV-க்கு சிந்தியா பேட்டி

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சி பகுஜன் சமாஜ் கட்சியுடன் சேர்ந்து ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய பிரதேசத்தின் முதல்வரை காங்கிரஸ் தலைமைதான் முடிவு செய்யும் என்று கட்சியின் இளம் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார். NDTV-க்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 தொகுதிகள் உள்ளன. இங்கு பெரும்பான்மை பெறுவதற்கு 116 இடங்களில் வெற்றி பெறவேண்டும். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு 114 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இங்கு பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

பகுஜன் சமாஜ் உதவியுடன் காங்கிரஸ் கட்சி விரைவில் ஆட்சியமைக்க உள்ளது. மத்திய பிரதேசத்தை பொறுத்தவரையில் கமல்நாத் மற்றும் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர்தான் கட்சியின் முகங்களாக இருந்து வருகின்றனர்.

இங்கு முதல்வர் நாற்காலிக்கு சிந்தியா மற்றும் கமல்நாத் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜோதிராதித்ய சிந்தியா NDTV-க்கு பேட்டி அளித்துள்ளளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

காங்கிரஸ் கட்சி வாய்ப்பு அளித்தார் முதல்வர் பொறுப்பு ஏற்பதற்கு நான் தயாராக உள்ளேன். மத்திய பிரதேசத்தின் முதல்வராக இருப்பதில் எனக்கு பெருமைதான். இருப்பினும் முதல்வர் யார் என்பதை காங்கிரஸ் தலைமைதான் தேர்வு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

.