Read in English
This Article is From Oct 19, 2019

கூடுதல் லக்கேஜ்க்கான கட்டணத்தை தவிர்க்க 2.5 கிலோ எடையுள்ள உடைகளை அணிந்து கொண்ட பெண்

5 பேண்ட் மற்றும் பல டி -ஷர்ட்டுகள் மற்றும் ஜாக்கெட்டுகளை அணிந்திருந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

Advertisement
விசித்திரம் Edited by

கூடுதல் கட்டணத்தை தவிர்க்க கூடுதலாக இருந்த 2.5 கிலோ எடையுள்ள ஆடைகளை அணிந்துள்ளார்.

விமானப்பயணி சமீபத்தில் கூடுதல் லக்கேஜ் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க 2.5 கிலோ எடையுள்ள துணிகளை அணிந்திருந்தார். அக்டோபர் 2 ம் தேதி பிலிப்பைன்ஸைச் சேர்ந்த ஜெல் ரோட்ரிக்ஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் இதை பதிவிட்டுள்ளார். விமானப் பணியாளர் அவரின் ஹோண்ட் லக்கேஜ் 2.5 கிலோ அதிகரித்து விட்டதாக தெரிவித்தார். இந்நிலையில் கூடுதல் கட்டணத்தை தவிர்க்க கூடுதலாக இருந்த 2.5 கிலோ எடையுள்ள ஆடைகளை அணிந்துள்ளார். 

ரோட்ரிக்ஸ் அதிகப்படியான சாமான்களை செலுத்த மறுத்து விட்டார். அதற்கு பதிலாக பலரால் வெற்றிகரமான செய்த தந்திரத்தையே தானும் செய்திருக்கிறார். தனது ஹேண்ட் லக்கேஜ்ஜின் எடையை 6.5 கிலோவுக்கு குறைக்க 2.5 கிலோ துணிகளை அணிந்து கொண்டார்.

பேஸ்புக்கில் பெரும் களிப்புடன் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அப்பெண் 5 பேண்ட் மற்றும் பல டி -ஷர்ட்டுகள் மற்றும் ஜாக்கெட்டுகளை அணிந்திருந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

Advertisement

#ExcessBaggageChallengeAccepted, என்ற ஹேஷ்டேக்கையும் பயன்படுத்தியிருந்தார்.

இந்த பதிவு 20,000க்கும் அதிகமாக ஷேர் செய்யப்பட்டுள்ளது. 33,000க்கும் அதிகமான கமெண்டுகளைப் பெற்றுள்ளது. 

Advertisement

“இரண்டு கிலோவுக்காக கூடுதல் கட்டணத்தைக் கட்ட விரும்பவில்லை. இது வைரலாகிவிடும் என்று தெரிந்திருந்தால் நான் சிறப்பாக போட்டோ எடுத்திருப்பேன்” என்று ஜாலியாக கூறியிருந்தார்.

“உடைகளை அணிந்து கொண்டது வெக்கையாக இருந்தது. மற்றவர்கள் இதை செய்ய நான் பரிந்துரைக்க மாட்டேன்” என்றும் கூறினார்.

Advertisement

இந்த ஆண்டு ஜூலை மாதம் இதே போன்ற ஒரு சம்பவத்தில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஒருவர் விமான நிலையத்தில் அதிகப்படியான லக்கேஜ்க்கான கட்டணத்தை தவிர்க்க 15 சட்டைகளை அணிந்து கொண்டார். 

Advertisement